குழந்தையின் உடல் எடை அதிகரிக்க.. வீட்டிலேயே புரோட்டின் பவுடர் செய்யலாம்!! வெறும் 2 பொருள் போதும்!!

0
85
xr:d:DAF0Ne0g8cI:775,j:4699922686508616380,t:24012408

வளரும் குழந்தைகளுக்கு உடல் எடை சரியான அளவில் இருக்க வேண்டியது முக்கியமான ஒன்று.ஆனால் இன்றுள்ள பெரும்பாலான குழந்தைகள் உடல் எடை குறைந்து நோய் எதிர்ப்பு சக்தியின்றி காணப்படுகின்றனர்.

 

எனவே குழந்தையின் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க கொண்டைக்கடலை மற்றும் வேர்க்கடலையை கொண்டு புரோட்டின் பவுடர் தயார் செய்து பாலில் கலந்து கொடுங்கள்.

 

கொண்டைக்கடலையில் புரோட்டின்,இரும்பு,நார்ச்சத்து,ஜிங்க் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் வேர்க்கடலையில் நார்ச்சத்து,பொட்டாசியம்,கால்சியம்,வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

 

தேவையான பொருட்கள்:

 

1)கொண்டைக்கடலை – ஒரு கப்

2)வேர்க்கடலை – ஒரு கப்

3)பேரிச்சம் பழம் – இரண்டு

4)வாழைப்பழம் – ஒன்று

5)பசும் பால் – ஒரு கிளாஸ்

 

செய்முறை விளக்கம்:

 

*அடுப்பில் வாணலி வைத்து ஒரு கப் கொண்டைக்கடலை போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடுங்கள்.கருப்பு கொண்டைக்கடலையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

 

*அடுத்து அதில் ஒரு கப் வேர்க்கடலை போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.

 

*இவை இரண்டும் நன்கு ஆறியப் பிறகு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளுங்கள்.

 

*பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு ஒரு கனிந்த வாழைப்பழத்தை நறுக்கி பாலில் சேர்க்கவும்.

 

*அடுத்து இரண்டு பேரிச்சம் பழத்தை விதை நீக்கிவிட்டு அதில் போட்டுக் கொள்ளவும்.அதன் பிறகு அரைத்த புரோட்டின் பவுடர் ஒரு தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இந்த பால் அவசியம் செய்து கொடுக்க வேண்டும்.