இனி ரேஷன் கடைகளில் இப்படி பொருள் வாங்க முடியாது! புதிய நடைமுறையை கொண்டு வரும் அரசு!

0
347
You can no longer buy such things in ration shops! The government will bring a new procedure!

GOVERNMENT OF TAMILNADU: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நாம் வாங்கும் ரேஷன் பொருட்களின் நடைமுறையை தமிழக அரசு தற்பொழுது மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அதாவது பாக்கெட்டுகள் மூலமாக ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்படும் முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

ரேஷன் கடைகளில் தற்பொழுது அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் பாமாயில் மட்டும் பாக்கெட் மூலமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் அடுத்து அரிசி, பருப்பு முதலான பொருட்கள் கூட பாக்கெட் மூலமாக வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.

இவ்வாறு பாக்கெட் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் பொழுது ரேஷன் பொருட்கள் திருட்டு போவது அதாவது ரேஷன் ஊழியர்கள் பொருட்களை எடுத்து வெளியில் விற்பனை செய்யப்படுவது போன்ற குற்றங்கள் தடுக்கப்படும்.

சமீப காலங்களாகவே ரேஷன் பொருட்கள் வெளியில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் பாக்கெட் முறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. ரேஷன் பொருட்கள் அனைத்தும் ஏற்கனவே பாக்கெட் செய்யப்படுவதால் பொருட்களின் எடையில் மாறுதல்கள் இருக்காது. பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் இருக்கும். இதனால் உள்ளூரில் ரேஷன் ஊழியர்கள் யாரும் ரேஷன் பொருட்களை திருட முடியாது.

எனவே பாக்கெட் மூலமாக ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது முதல்கட்டமாக ஒரு கடையில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்பொழுது ஒரு கடை அடுத்ததாக தொகுதிக்கு 1 கடை என்று 234 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு கடையில் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும். பின்னர் 5 கடைகளாக விரிவுபடுத்தப்படும்.

அந்த வகையில் ரேஷன் பொருட்களை பாக்கெட் மூலமாக வழங்கப்படும் திட்டம் தற்பொழுது சேலம் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்களிடையே வரவேற்பு பெறும் பட்சத்தில் அடுத்தடுத்து அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும்.

அது மட்டுமில்லாமல் ரேஷன் கடைகளில் அரசி விற்பனை செய்வது தொடர்பாகவும் தமிழக அரசு சில தகவல்களை அறிவித்து உள்ளது. மேலும் புதிய திட்டம் ஒன்றையும் செயல்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது அனைத்து ஏழை மக்களுக்கும் உணவு குறைபாட்டை தடுக்கும் விதமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களில் வகையில் ரேஷன் பொருட்கள் தமிழக மக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு 355 சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுகின்றது. அதன் பின்னர் இந்த பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள 36578 ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு ஏழைகளின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் பொருட்களை ஒரு சிலர் இலாப நோக்கத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த குற்றங்களை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட உணவு பண்டங்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களும், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். மேலும் குற்றத்தில் ஈடுபடுபவர்களின் மீது இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1995இன் படியும் இது தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகின்றது.

இதையடுத்து இந்த குற்றங்களை தடுக்கும் விதமாக தமிழக அரசு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தமிழக அரசு தற்பொழுது ஜிபிஎஸ் உடன் கூடிய புதிய வழித்தடம் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசு அமைக்கும் ஜிபிஎஸ் வழித்தடத்தில் தான் இனிமேல் வாகனங்கள் செல்ல வேண்டும். இந்த வாகனங்கள் ஜிபிஎஸ் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும். மேலும் இதில் ஜிபிஎஸ் உடன் கூடிய லாக் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது இன்றியமையா உணவு பண்டங்கள் சட்டம் 1980ன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல் துறையின் தடுப்பு காவலிலும் வைக்கப்படுகின்றனர்.

கடந்த 2023ம் வருடம் ஜூலை 1ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரையில் ஒரு மாதத்திற்குள் 49 லட்சம் மதிப்புள்ள 3610 குவிண்டால் அரிசி, 181 எரிவாயு உருளைகள், 1161 கிலோ கோதுமை, 1710 கிலோ துவரம் பருப்பு, 2140 லிட்டர் மண்ணெண்ணெய் 36 பாக்கெட் பாமாயில் ஆகியவை அந்த ஒரு மாதத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரிசி திருட்டு போவது உச்சம் அடைந்துள்ளது. முக்கியமாக தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அரிசி கடத்துவது அதிகமாகி இருக்கின்றது. மேலும் தமிழக ரேஷன் கடைகளில் கடத்தப்படும் அரிசிகள் வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குள் முறைகேடாக ரேஷன் அரிசியை கடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய 619 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980ன் கீழாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பான புகார்களுக்கு மக்கள் 1800 599 5950 என்ற கட்டணம் இல்லா எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.