இனி ஒரே போனில் இதனையெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்! முதியவர்களுக்கான தமிழக அரசின் அடுத்த அப்டேட்!

0
119
You can now get all this on one phone! Government of Tamil Nadu's next update for the elderly!

இனி ஒரே போனில் இதனையெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்! முதியவர்களுக்கான தமிழக அரசின் அடுத்த அப்டேட்!

பெற்றோர்கள் குழந்தைகளுக்காகவே தங்களது வாழ்க்கையை வாழ்கின்றனர்.அவ்வாறு வாழும் பெற்றோர்களை பிள்ளைகள் நாளடைவில் வளர்ந்து கண்டுகொள்ளாமல் போகின்றனர்.அந்தவகையில் பிள்ளைகள் தங்களது பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியாமல் முதியோர் இல்லத்திற்கு அனுப்புவது,வீட்டை விட்டு வெளியே அனுப்புவது என்று செய்து விடுகின்றனர்.சிலர் வீட்டில் பிள்ளைகளை தரும் கொடுமைகள் தாங்க முடியாமல் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.இவ்வாறு பலர் தங்களது குடும்பத்தை விட்டு வேறொரு ஊருக்கு வந்து தனியாக இருக்கின்றனர்.

பிள்ளைகளும் அதனை பற்றி கவலை கொள்வதில்லை.அதுமட்டுமின்றி பலர் தங்களது வீட்டில் இருக்கும் பெரியவர்களை அதிகளவு துன்புறுத்தியும் வருகின்றனர்.அந்தவகையில் சிரமப்படும் முதியவர்களுக்காக அரசாங்கம் ஓர் புதிய அறவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது இனி பெரியவர்கள் யார் மூலியமாவது துன்புறுத்தப்பட்டாலோ அல்லது ஏதேனும் அவர்களுக்கு தேவைகள் இருந்தாலோ இனி அவர்கள் ஒரே போன் செய்தால் போதும்,அவர்கள் தேவைகள் அனைத்தையும் தமிழக அரசு செய்து கொடுக்கும் என கூறியுள்ளனர்.

அதாவது சிரமப்படும் பெரியவர்கள் 14567 என்ற எண்ணிற்கு அழைப்பு விடுக்கலாம்.அழைப்பு விடுத்து தங்களது சிரமங்களை கூறினால் அதற்கேற்றவாறு தமிழக அரசு அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் என கூறியுள்ளனர்.இந்த அழைப்புகளில் யாரேனும் துன்புறுத்தப்படுகிறோம் என்று கூறினால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.அந்தவகையில் கால் செய்பவர்களுக்கு முதியோர் இல்லங்கள்,பராமரிப்பு வசதி மையங்கள்,மருத்துவ ஆலோசனை வழங்கும் இடங்கள்,வலி நிவாரண மையங்கள்,மேலும் முதியர்வர்களுக்கு தேவைப்படும் அனைத்து தகவல்கள் தர உள்ளனர்.

இது முதியவர்களின் குறைகளை அறிவதற்காக தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.பெரியோர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக மத்திய சமூக நீதி அமைச்சகம் மாநிலம் முழுவதும் கட்டணமில்லா அழைப்பு மையங்களை ஆரம்பித்துள்ளனர்.அந்தவகையில் தமிழகத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.இந்த உதவி மையமானது அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என கூறியுள்ளனர்.பெரியோர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை இந்த  மையங்கள் மூலம் கேட்டுகொள்ளலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் திவ்யதர்சினி கூறியுள்ளார்.