Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

11 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம் செய்யலாம்… புத்தம் புதிய எலக்டிரிக் கார் அறிமுகம்… 

11 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம் செய்யலாம்… புத்தம் புதிய எலக்டிரிக் கார் அறிமுகம்…

 

11 நிமடங்கள் மட்டும் சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யக் கூடிய புத்தம் புதிய எலக்டிரிக் காரை ஹோன்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

 

உலகில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோன்டா நிறுவனம் தனது புத்தம் புதிய எலக்டிர்க் கார் ஒன்றை  அறிமுகம் செய்துள்ளது. இந்த காருக்கு பி செக்மென்ட் எஸ்யுவி e:Ny1 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

முழுவதும் எலக்டிரிக் கார் என்ற அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய பி செக்மென்ட் எஸ்யுவி e:Ny1 கார் புதிய முன்புற-வீல்-டிரைவ் e:Ny1 ஆர்க்கிடெக்சரான F ஃபாளாட்பார்மில் உருவாக்கப்பட்ட முதல் எலக்டிரிக் கார் ஆகும்.

 

இந்த புதிய ஹோன்டா e:Ny1 எலக்டிரிக் காரில் ஹீட்டெட் லெதர் ஸ்டீரிங் வீல், பானரோமிக் சன்ரூப், பிரீமியம் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் ஸ்டான்டர்ட் அம்சங்களாக வழங்கப்படுகின்றது. மேலும் ஆட்டோ டிம்மிங் மிரர்கள், ஹேன்ட்ஸ் ஃபிரீ டெயில்கேட், எட்டு வழிகளில் அட்ஜெட் செய்யக் கூடிய ஓட்டுநர் இருக்கை, வயர்லெஸ் சார்ஜிங் பேட், ஏராளமான யுஎஸ்பி போர்ட்கள், டூயல் ஜோன் ஏசி, புஷ் ஸ்டார்ட் பட்டன் ஆகிய வசதிகளும் வழங்கப்படுகின்றது.

 

இதில் இருக்கும் எலக்டிரிக் மோட்டார்கள் 204 ஹெச்பி பவர், 315 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிபடுத்தும் திறனை கொண்டுள்ளது. மேலும் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை வெரும் 7.6 நொடிகளில் இந்த எலக்ட்ரிக் கார் எட்டிவிடும்.

 

இந்த புதிய ஹோன்டா e:Ny1 எலக்டிரிக் காரில் வழங்கப்பட்டுள்ள பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். மேலும் இந்த பேட்டரியை 100 கிலோவாட் சார்ஜரை கொண்டு வெறும் 11 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்.

 

இந்த வசதிகளுடன் கொலிஷன் மெடிகேஷன் பிரேக்கிங், ரோட் டிப்பாச்சர் மெடிகேஷன், பிலைன்ட் ஸ்பாட் இன்பர்மேஷன், பார்க்கிங் சென்சார்கள், லேன் கீப் அசிஸ்ட், ரிவர்ஸ் கேமரா போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது.

 

மேலும் 15.1 இன்ச் அளவில் சென்ட்ரல் டச் ஸ்கிரீன், 10.25 இன்ச் அளவில் டிஜிட்டல்  இன்ஸ்ட்ருமென்ட் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிரைவிங் மற்றும் இன்போடெய்ன்மென்ட் அம்சங்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றது.

 

இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த புதிய ஹோன்டா எஸ்யுவி e:Ny1 எலக்டிரிக் காரின் விற்பனை அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் தொடங்கும் என்று தெரிகிறது. எனினும் இந்தியாவில் இந்த புதிய எலக்டிரிக் காரின் விற்பனை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

 

Exit mobile version