கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட (STARTUP) நிறுவனம் REM space- மூலம், காதலர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது தூக்கத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளலாம் என ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இந்த தகவல் “கனவிலும் நினைக்கல” என்ற பாடல் வரி போன்று உள்ளது.
இது காதலர் மத்தியில் பெரும் ஆர்வத்தை காட்டி உள்ளது. மேலும் இது போன்ற பல சாதனைகள் செய்வது மனித குலத்திற்கு பெருமை சேர்க்கிறது என ஆராய்ச்சியாளர்கள் பெருமிதம் அடைகிறார்கள். இந்த ஆய்வுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என தேர்வு செய்யப்பட்டு இருவரும் கனவுகளை அடையலாம் என பயிற்சி எடுத்தனர்.
ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வுக்கு பயிற்சி மிக முக்கியம் என தெரிவித்துள்ளார்கள். இவ்வளவு தொழில்நுட்பம் இருந்தாலும் மக்களுக்கு REM என்றால் என்ன என்று தெரியவில்லை. REM என்றால் என்பது தூக்கத்தின் ஒரு கட்டமாகும். REM தூக்கத்தின் சராசரி நீளம் சுமார் 20 நிமிடங்கள். ஆனால் 10 முதல் 40 நிமிடங்கள் வரை மாறுபடும்.
REM ஆய்வின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றால் மூளை வளர்ச்சி தூண்டுகிறது, கற்றல் மற்றும் படைப்பாற்றலுக்கு உதவுகிறது. மேலும் மூளையின் வேகம் மற்றும் சிக்கல்களை தீர்கிறது . இந்த ஆய்வு 5ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு கடந்த செப்டம்பர் 24ம் தேதி நடத்தப்பட்டது. தூக்கத்தின் மூலம் கனவுகள் பரிமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.