Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் வெள்ளையாக இனி கெமிக்கல் க்ரீம்ஸ் வேண்டாம்!! இந்த உணவுகளை சாப்பிட்டாலே சருமம் பளபளக்கும்!!

சரும பராமரிப்பில் தீவிரமாக ஈடுபட்டாலும் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைப்பதில்லை என்று பலரும் குமுறுகின்றனர்.சீக்கிரம் வெள்ளையாக,நடிகைகள் போன்று சருமம் ஜொலிக்க கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.செயற்கை முறையில் சருமத்தை ஜொலிக்க வைக்க நினைத்தால் நிச்சயம் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

கெமிக்கல் அழகு சாதன பொருட்கள் சருமச் செல்களை முற்றிலும் சேதப்படுத்திவிடும்.எனவே உங்கள் சருமத்தை இயற்கையான முறையில் பளபளப்பாக வைத்துக் கொள்ள இங்கு சொல்லப்பட்டுள்ள உணவுமுறையை பின்பற்றுங்கள்.

1)வைட்டமின் சி

எலுமிச்சை,ஆரஞ்சு போன்ற பழங்களில் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பழங்களின் சாறை பருகினால் சருமம் பளபளப்பாக மாறும்.

2)நீர்ச்சத்து

தண்ணீர் சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் சருமத்தில் இயற்கையான ஈரப்பதம் மற்றும் பொலிவு காணப்படும்.

3)கீரை உணவுகள்

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை கீரை உணவுகளை சாப்பிட வேண்டும்.கீரையில் வைட்டமின் சி,ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.

4)ஒமேகா 3 கொழுப்பு அமிலம்

மீன்,வால்நட்,பாதாம் போன்ற உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக நிறைந்திருக்கிறது.இவற்றை சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.இந்த உணவுகள்
சருமத்திற்கு இயற்கை பொலிவை கொடுக்கிறது.

5)குங்குமப் பூ பால்

தினமும் ஒரு கிளாஸ் குங்குமப் பூ சேர்த்த பால் குடித்து வந்தால் சரும நிறத்தில் நல்ல மாற்றம்
ஏற்படும்.

6)பழங்கள்

பப்பாளி,மாதுளை,ஆப்பிள்,வாழைப்பழம் போன்ற பழங்களை தினசரி சாப்பிட்டு வந்தால் சரும நிறத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

7)கிழங்கு

பீட்ரூட்,கேரட் போன்ற கிழங்குகளை வெட்டி ஜூஸ் குடித்து வந்தால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

8)பால் பொருட்கள்

பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் தயிர்,மோர் போன்ற பானங்களை குடிப்பதால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

9)வைட்டமின் ஈ உணவுகள்

நாம் சாப்பிடும் உணவில் வைட்டமின் ஈ சத்து இருக்க வேண்டும்.இந்த வைட்டமின் ஈ சருமத்திற்கு இயற்கை பளபளப்பை கொடுக்கிறது.

Exit mobile version