Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேருந்துகளில் டிக்கெட் எடுக்க இனி ரொக்கம் கொடுக்க தேவையில்லை!! வந்தாச்சு புதிய வசதி!

You don't need to pay cash to buy bus tickets anymore!! A new facility has arrived!

You don't need to pay cash to buy bus tickets anymore!! A new facility has arrived!

பேருந்துகளில் டிக்கெட் எடுக்க இனி ரொக்கம் கொடுக்க தேவையில்லை!! வந்தாச்சு புதிய வசதி!

குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள ஏதுவாக உள்ள போக்குவரத்துகளில் ஒன்று பேருந்து போக்குவரத்து.நம் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்திற்கு அடுத்து பேருந்துகளில் தான் அதிகளவு பயணம் செய்கின்றனர்.

பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது நடத்துனருக்கும் பயணிகளுக்கும் இடையே அடிக்கடி சில்லறை பிரச்சனை ஏற்படும்.சில நேரம் சில்லறை பாக்கியால் கை கலப்பு ஏற்படுவதும் உண்டு.இந்த சில்லறை பிரச்சனை இன்று நேற்று அல்ல காலம் காலமாக நடந்து வரக் கூடிய ஒரு நிகழ்வு தான்.

இந்த சில்லறை பிரச்சனைக்கு தற்பொழுது ஒரு விடிவுகாலம் பிறந்து இருக்கிறது.இனி டிக்கெட்டிற்கு உரிய தொகையை ரொக்கமாக கொடுக்க வேண்டியதில்லை.யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெற்று பயணம் மேற்கொள்ளலாம்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெற்றுக் கொள்ளும் வசதி தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இதன் மூலம் சில்லறை தட்டுப்பாடு முழுமையாக நீங்கி இருக்கிறது.

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமாக 1068 பேருந்துகள் இயங்கி வரும் நிலையில் அனைத்து பேருந்துகளிலும் இந்த UPI வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதேபோல் டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு பயன்படுத்தியும் பயண டிக்கெட்டை பெற்றுக் கொள்ள முடியும்.

பேருந்து நடத்துனரிடம் உள்ள டிக்கெட் வழங்கும் மிஷினின் பின் பக்கத்தில் கியூ ஆர் கோடு ஒட்டப்பட்டிருக்கும்.UPI பயன்படுத்தி இந்த கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட்டிற்கு உரிய பணத்தை அனுப்ப வேண்டும்.அனுப்பிய தொகை விவரத்தை நடத்துனரிடம் காட்டினால் தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டை வழங்குவார்.இந்த வசதியால் சிரமம் இல்லாமல் எளிதில் டிக்கெட் பெற்று பயணம் மேற்கொள்ள முடியும்.

Exit mobile version