மோசமான உணவு பழக்கங்கள் மற்றும் நாம் பின்பற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் சிறு வயதிலேயே கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது.கம்ப்யூட்டர்,லேப்டாப்,மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களை அதிக நேரம் பார்ப்பதால் கண் பார்வை குறைபாடு உண்டாகிறது.
கண்களின் முக்கியத்துவம் தெரியாத இன்றைய இளைய தலைமுறை சிறு வயதிலேயே கண்ணாடி அணிகிறது.கடந்த காலங்களில் வயதானவர்கள் மட்டுமே கண் பார்வை மங்கல் பிரச்சனையால் கண் கண்ணாடி அணிவார்கள்.ஆனால் இன்று 5 வயது குழந்தை கூட கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கண் பார்வை திறனை மேம்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்:
1)ஒரு கிளாஸ் நீரில் இரண்டு குங்குமப்பூ சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து பருகி வந்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.
2)பாதாம் பருப்பை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பருகினால் கண் பார்வை திறன் மேம்படும்.
3)ஒரு கிளாஸ் தண்ணீரில் கால் தேக்கரண்டி சோம்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.
4)வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டு வந்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.
5)ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீன் உணவுகளை எடுத்துக் கொண்டால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.
6)பெருஞ்சீரகத்தை பொடித்து பாலில் காய்ச்சி பருகி வந்தால் கண் பார்வை அதிகரிக்கும்.
7)பெரிய நெல்லிக்காயை அரைத்து ஜூஸாக பருகி வந்தால் கண் பார்வை குறைபாடு சரியாகும்.
8)கேரட்,கீரைகளை அதிகளவு சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைபாடு நீங்கி பார்வை திறன் அதிகரிக்கும்.