ஆவின் பால் வாங்க இனி ஸ்மார்ட் கார்டு தேவை! வெளிவந்த புதிய உத்தரவு!

0
228
You need a smart card to buy milk! A new order has come out!

ஆவின் பால் வாங்க இனி ஸ்மார்ட் கார்டு தேவை! வெளிவந்த புதிய உத்தரவு!

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்திருந்த நிலையில், அதனை தமிழக அரசு நிறைவேற்றியது. பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டது. அந்த வகையில் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 வரை உயர்த்தினர். இதுவே மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ. 46 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது.

மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்கள் இங்கு குறைந்த விலைக்கு பாலை வாங்கிக் கொண்டு வெளியில் விற்று வருவதாக புகார்கள் வருகிறது. இதனை தடுக்க இனிவரும் காலங்களில் ஆவின் மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஸ்மார்ட் கார்டை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கான பணியும் தற்பொழுது தீவிரமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து மண்டலங்களிலும் ஆவின் மாதாந்திர அட்டையுடன் ஸ்மார்ட் கார்டை இணைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலமே ஸ்மார்ட் கார்டை இணைத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். இவ்வாறு செய்வதால் குறைந்த விலையில் மாதாந்திர அட்டை உபயோகம் செய்து பாலை வாங்கி வெளியில் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் என்று கூறுகின்றனர்.