Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒன்றாம் தேதி முதல் இதை நீங்கள் செய்ய வேண்டும்!! இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் – முன்னாள் முதல்வர் எச்சரிக்கை!!

you-should-do-this-from-day-one-if-not-protest-will-be-held-ex-chief-minister-warning

you-should-do-this-from-day-one-if-not-protest-will-be-held-ex-chief-minister-warning

ஒன்றாம் தேதி முதல் இதை நீங்கள் செய்ய வேண்டும்!! இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் – முன்னாள் முதல்வர் எச்சரிக்கை!!

கர்நாடக மாநிலம் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் மக்களுக்கு வருகின்ற 1ம் தேதி முதல் இலவச10 கிலோ அரிசி வழங்க வேண்டும்.இல்லை என்றால் போராட்டம் நடதத்ப்படும் என்று தற்போதைய கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் “அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று தற்போதைய முதல்வர் சித்தராமையா அவர்கள் தேர்தல் அறிக்கையாக  அறிவித்தார்.ஆனால் இன்னும் மக்களுக்கு இலவச அரிசி வழங்காமல் தற்போது மத்திய அரசு அரிசி வழங்க மறுத்துவிட்டதால் அரசி வழங்க முடியவில்லை என்று சித்தராமையா அவர்கள் கூறுகிறார்.முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் மாற்று ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.ஆனால் தற்போது அரிசி கிடைக்கவில்லை என்று காரணங்களை சொல்கிறார்.

இது காங்கிரஸ் கட்சி தனது உத்திரவாதங்களில் இருந்து பின் வாங்கி விட்டதை காட்டுகின்றது.சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அரிசி வாங்குவதாக அவர் கூறியுள்ளார்.ஏழை மக்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமாக உள்ளது.கர்நாடக விவசாயிகள் அரிசி கொடுக்க முன்வந்தால் கர்நாடக அரசு அரிசியை கொள்முதல் செய்ய வேண்டும்.பாஜக கட்சியினரே அரசி கொடுக்க தயார் செய்யட்டும் என்று கூறுவது சரியல்ல.

வருகிற 1ம் தேதி முதல் கர்நாடக அரசு ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்காவிட்டால் பாஜக கட்சி போராட்டத்தில் குதிக்கும்.கர்நாடக மாநிலத்தில் வறட்சி நிலவுகின்றது.கர்நாடகத்தில் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் இல்லாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து கர்நாடக அரசின் கவனத்திற்கு நான் கொண்டு வந்தேன். ஆனால் கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு இதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் காணொலி வாயிலாக ஒரு கூட்டத்தை நடத்திவிட்டு அமைதியாகிவிட்டார்.

வறட்சி உள்ள பகுதிகளில் செயல்பாட்டை அமைக்க வேண்டும். முதலமைச்சர் சித்தராமையா அவர்களின் தலைமையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் அன்பு நீண்ட நாள் நீடிக்காது என்று தோன்றுகிறது.எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை சட்டசபை கூட்டத்திற்கு முன்பு அறிவிக்கப்படும்” என்று முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் கூறியிருகிறார்.

Exit mobile version