காங்கிரஸ் கட்சியில் நீங்கள் தான் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்!!. ராஜஸ்தான் முதல் மந்திரி கூறியதால் சர்ச்சை ?..

0
215
You should take the responsibility of leader in Congress party!!. Controversy because the Chief Minister of Rajasthan said?..

காங்கிரஸ் கட்சியில்.. நீங்கள் தான் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்!!. ராஜஸ்தான் முதல் மந்திரி கூறியதால் சர்ச்சை ?..

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க தொடர்ந்து மறுத்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ராகுல் காந்தி இதை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிட வில்லை என தெரிகிறது.தற்போது இந்த வருடம் சோனியா காந்தி கட்சி தலைவராக பொறுபேற்று வருகிறார்.

இந்நிலையில் செப்டம்பர் இருபதாம் தேதிக்குள் அடுத்த தலைவருக்கான தேர்வு  நடைபெறும் என அக்கட்சியின் தேர்தல் குழு அறிவித்திருந்தது.இந்த அறிவிப்பு வெளிவந்த பிறகு  அடுத்த காங்கிரஸ் கட்சி தலைவர் யார்?எப்போது தலைவர் ஆவார்?என பல கேள்விகள் மற்றும் விவாதங்கள் அதிகரிக்க தொடங்கிவயுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியே அந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக்  கெலாட் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.மேலும் இது குறித்து அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது,ராகுல் காந்தி கட்சி தலைவராக வரவில்லை என்றால்,

அந்த கட்சில் அடங்கியுள்ள ஒட்டு மொத்த காங்கிரஸ்காரர்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும்.நாட்டில் உள்ள சாமானிய காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர் இந்த பதவியை தானாக ஏற்க வேண்டும்.இந்த கட்சிக்குள் ராகுல் காந்திக்கு தான் ஆதரவான சூழல் இருக்கிறது.

தொடர்ந்து கடந்த 32ஆண்டுகளாக அவரது குடும்பத்திலிருந்து யாரும் அமைச்சராகவோ, மத்திய அமைச்சராகவோ ,பிரதமராகவோ,முதல்வாராக பொறுப்பேற்றதில்லை என கூறியிருந்தார்.பிறகு எதற்கு மோடி அவர்கள் இந்த குடும்பத்தை பார்த்து பயப்படுகிறார் ?சுதந்திரத்திற்கு முன்பும் சரி சுதந்திரத்திற்கு பிறகும் சரி காங்கிரஸ் கட்சி எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே நிலையில் தான் இருக்கிறது.

மேலும் அனைத்து மதங்களையும் வகுப்பினரையும் அழைத்து செல்லும் கட்சி தான் இந்த காங்கிரஸ் கட்சி.கடந்த 75 ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயகத்தை காங்கிரஸ் உயிர்ப்புடன் தான் வைத்துள்ளது.அதன் காரணாமாகவே தான் இன்று நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகவும் மற்றும் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராகவும் உள்ளார்கள் என்றார் ராஜஸ்தான் முதல் மந்திரி அசொக்கேலாட்.