கடலூரில் சவால் விட்ட முதல்வர்!

0
114

ஸ்விட்ச் போட்டா உடனே அனைத்தும் சரியாகிவிடுமா ரிமோட் பட்டனை அழுத்தினால் உடனே எல்லாம் சரியாகி விடுமா என்ன? மின்சாரம் மிகவும் ஆபத்தானது அனைத்து உயிரும் மிகவும் முக்கியமானது ஒவ்வொன்றாகத் தான் சரி செய்ய இயலும் நீங்கள் வேண்டுமானால் ஒரு கம்பத்தை தூக்கி நிறுத்திப் பாருங்கள் அப்போது தெரியும் எவ்வளவு நேரம் ஆகும் என்று உழைத்தால்தான் அந்த உழைப்பின் அருமை தெரியும்.

கம்பத்தை தூக்கி நிறுத்திவிட்டால் அனைத்தும் சரியாகிவிடுமா மரக்கிளைகள் விழுந்து கிடைக்கின்றது அதனை சரியாக அப்புறப்படுத்தாமல் இருந்தால் எர்த் அடிக்கும் சம்பவம் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது அதை அனைத்தையும் சரி செய்துவிட்டு தான் வேலையை முடிக்க முடியும்.

தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் உழைக்கிறார்கள் அதற்காக அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள் அவர்களுடைய உழைப்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் ரெட்டிச்சாவடி குமாரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தபோது செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், அனைவரும் ஒன்றிணைந்து எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிர்களின் சேதம் தவிர்க்கப்பட்டு இருக்கின்றது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியாக எடுத்த காரணத்தால் இந்த புயலால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

புயல் மழை வெள்ளத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டது உயிரிழப்பைத் தவிர்ப்பதற்காகவே மழைநீர் முழுவதும் அகற்றப்பட்ட பின்னரே மின்வினியோகம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த 321 மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன புயல் காரணமாக மாவட்டத்தில் மிக அதிக பாதிப்பு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்காரணமாக துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னெடுத்தோம் ஆயிரம் மின்சார ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு காலையிலிருந்து பணி நடந்துவருகின்றன இன்னும் முடிக்கப்படவில்லை இயல்பு நிலை திரும்பவில்லை என்ற கேள்விக்கு தான் மேற்கண்ட பதில் சொல்லியிருக்கிறார் முதல்வர்.