நடிகராகவும் நடிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவராகவும் திகழக்கூடியவர் நடிகர் நாசர். தற்பொழுது நாசருடைய சகோதரன் தன்னுடைய தாய் தந்தை மற்றும் தன்னுடைய மகன்களையே கவனிக்க மறுத்த நாசர் ஞானி போன்று பேசிக்கொள்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசியிருப்பதாவது :-
தன்னுடைய தாய் தந்தை மட்டுமல்லாது தன்னுடைய மற்றொரு தம்பி 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும் தன்னுடைய தம்பிக்கு மனநிலை சரியில்லை என்றும் இவர்கள் மூவரையும் ஜவஹர் ஆகிய தான் மட்டுமே தற்பொழுதுவரை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இதனால் தன்னால் தன்னுடைய சுய வாழ்க்கையை குறித்த யோசிக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய பெற்றோர் நாசரின் உடைய பிள்ளைகளை பார்த்ததில்லை என்றும் தற்பொழுது வரை இரண்டு மூன்று முறை மட்டுமே நாசர் உடைய வீட்டிற்கு இவர்கள் சென்றுள்ளனர் என்றும் கூறியிருக்கிறார். நான் சார் தன்னுடைய பெற்றோர்களை கவனித்துக் கொள்ளவில்லை என்றாலும் தன்னுடைய பிள்ளைகளையாவது சரியாக கவனித்திருக்கலாம் என்று தெரிவித்தவர், தான் பெற்ற பிள்ளைகளை கூட நாசர் அவர்களால் சரிவர பார்த்துக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் இதுபோன்ற பல முக்கிய விஷயங்களை கவனிக்காத இவர் பொது வாழ்க்கையில் ஞானி போல் பேசுவது எந்த விதத்தில் சரி என்று வீடியோ ஒன்றில் தன்னுடைய ஆதங்கத்தை கொண்டிருக்கிறார் நாசரின் உடன்பிறந்த சகோதரர் மற்றும் நடிகரான ஜவகர் அவர்கள்.