தம்மா துண்டு சோம்பில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

0
82

தம்மா துண்டு சோம்பில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் வாசனை நிறைந்த பொருட்களில் ஒன்றான பெருஞ்சீரகம் என்று சொல்லப்படும் சோம்பில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.இதில் பொட்டாசியம்,மாங்கனீசு,துத்தநாகம்,இரும்புச்சத்து,மற்றும் தாமிரம் உள்ளிட்ட தாதுக்கள் அதிகம் உள்ளன.

*செரிமான பிரச்சனை இருப்பவர்கள் 10லிருந்து 15 சோம்பை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனை நீங்கும்.வாயு தொல்லையால் அவதிப்படும் நபர்கள் இவற்றை உட்கொள்வது நல்லது.

*தினசரி உணவில் இவற்றை சேர்த்து வருவதன் மூலம் குடற்புண்,வறட்டு இரும்பல் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும்.

*சோம்பில் டீ செய்து குடித்து வந்தால் நெஞ்சு எரிச்சல்,பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை,சிறுநீரக தொடர்பான பிரச்சனைகள்,இரத்த அழுத்த பிரச்சனை உள்ளிட்டவை நீங்கும்.

*தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சோம்பு தண்ணீரை குடிப்பது நல்லது.

* உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சோம்பு டீ செய்து பருகலாம்.இதனால் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடலை பிட் ஆக வைக்கும்.மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

*அடிக்கடி பசி உணர்வு ஏற்படும் நபர்கள் இந்த சோம்பை உண்டு வருவதன் மூலம் பசியை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

சோம்பு தண்ணீர் செய்முறை:-

ஒரு டம்பளர் நிறைய தண்ணீர் எடுத்து கொண்டு அதில் 1 தேக்கரண்டி அளவு சோம்பு சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.பிறகு அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் உடம்பில் உள்ள பல பிரச்சனைகள் நீங்கும்.

சோம்பு டீ செய்முறை:-

டீ போடும் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் 1 தேக்கரண்டி அளவு சோம்பு சேர்த்து மிதமான தீயில் சூடு படுத்தவும்.பிறகு அடுப்பை அனைத்து பாத்திரத்தின் மேல் தட்டு வைத்து சிறிது நேரம் மூடிவைக்க வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் சத்துக்கள் ஆவியாக வெளியேறுவது தடுக்கப்படும்.மேலும் தண்ணீர் சிறுது நிறம் மாற தொடங்கும்.அப்பொழுது இவற்றை பருகுவது நல்லது.தினமும் காலையில் தேயிலை டீ,காபி போன்றவற்றை பருகுவதை தவிர்த்து இந்த சோம்பு டீ தயாரித்து பருகி வாருங்கள்.உடம்பில் உள்ள செரிமான கோளாறு,வாயு தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நாள்பட்ட அளவில் குணமடையும்.