வங்கியில் போடப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பு இல்லையா? ஆர்.டி.ஐ பதிலால் பரபரப்பு
ஒரு வங்கி தோல்வி அடைந்து விட்டாலோ அல்லது திவால் ஆகி விட்டாலோ அதில் சேமிப்பு கணக்கு உள்பட எந்த வகை கணக்கிலும் எவ்வளவு பணம் இருப்பு வைத்திருந்தாலும், ஒரு லட்சம் மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும் என்றும் ஆர்.டி.ஐ பதிலளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது
ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு, பிக்சட் டெபாசிட் கணக்கு, கரண்ட் கணக்கு உட்பட எத்தனை கணக்குகளில் எத்தனை இலட்சம் அல்லது கோடி டெபாசிட் செய்திருந்தாலும், அந்த வங்கி ஒருவேளை எதிர்பாராத காரணத்தினால் திவாலானால் டி.ஐ.சி.ஜி.சி அதாவது ரிசர்வ் வங்கியின் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தின் விதிப்படி ஒரு லட்சம் மட்டுமே அதிகபட்ச நிவாரணம் கிடைக்கும் என ஆர்.டி.ஐ பதிலளித்துள்ளது.
இந்த பதிலால் நாம் வங்கியில் போடப்பட்டு இருக்கும் பணத்திற்கு பாதுகாப்பு இல்லையோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனையடுத்து பொதுமக்கள் அதிகபட்சமாக வங்கியில் உள்ள கணக்குகளில் ஒரு லட்சம் மட்டுமே டெபாசிட் செய்து விட்டு ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட், தபால் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் பிரித்து தங்களது பணத்தை பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்