நமக்கு பிடித்தமான வேலைகள் கிடைப்பதற்கும், அந்த வேலையில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் பணி புரிவதற்கும், செய்யக்கூடிய வேலையில் பதவி உயர்வு கிடைப்பதற்கும் பிரபஞ்ச எண்கள் பயன்படும் என கூறப்படுகிறது. இந்த பிரபஞ்ச எண்கள் என்றால் என்ன? அது எவ்வாறு பயன்படுகிறது? அதற்கான அர்த்தம் என்ன? என்பதை பற்றி நாம் அறிந்து கொண்ட பின்னர், இந்த எண்ணை நாம் பயன்படுத்தினால் தான் நமக்கு முழு திருப்தியும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
நமது எண்ணங்களின் அலைகளை எண்களின் மூலமாக, ஒரு விதமான ஆற்றல்களை ஏற்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு எண்களுக்கும் ஒவ்வொரு விதமான அலை வரிசைகள் உள்ளன. அதாவது ஒன்று என்ற எண்ணை நாம் கூறும்பொழுது, அதற்கு என ஒரு தனிப்பட்ட அதிர்வலைகள் உள்ளன.
நமது மனம் சோர்வாகவோ அல்லது ஏதேனும் குழப்பத்திலோ இருக்கும் பொழுது, நேர்மறையான ஆற்றல்களை தரக்கூடிய எண்களை நாம் பயன்படுத்தும் பொழுது, அந்த நேர்மறையான ஆற்றல்கள் மற்றும் அந்த எண்களின் எனர்ஜி நமக்கு கிடைப்பதாக கூறப்படுகிறது. இதனால் நாம் நினைத்த காரியம் நடக்கும் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வேலை சம்பந்தமான பிரச்சனைகள் அல்லது நல்ல வேலை கிடைக்க வேண்டும் என நினைக்கும் பொழுது, அந்த வேலை தொடர்பான எண்களை நாம் பயன்படுத்தும் பொழுது, அந்த பிரபஞ்சம் நமக்கு தேவையானதை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த எண்களை நாம் கூறும்பொழுது, உதாரணமாக 518 என இருந்தால் அதனை ஐந்து ஒன்று எட்டு என தனித்தனியாக தான் கூற வேண்டும். இந்த எண்களை ஆங்கிலத்தில் கூறினாலும் சரி, தமிழில் கூறினாலும் சரி ஆனால் தனித்தனியாக தான் கூற வேண்டும். ஆங்கிலத்தில் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதே போன்று இந்த எண்களுடன் இது தொடர்பான சுவிட்ச் வேர்டு பயன்படுத்தும் பொழுது நாம் நினைத்த காரியம் மிக விரைவில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
நமக்கு பிடித்தமான வேலை மற்றும் வேலை தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்றால் 493151 864 1491 இந்த எண்களை பயன்படுத்த வேண்டும். இந்த எண்களை தினமும் கூறுவதன் மூலம் நாம் நினைத்த காரியம் கண்டிப்பாக கைகூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த எண்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு நமது பர்ஸ் மற்றும் வேலை செய்யக்கூடிய இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு இந்த எண்களை எழுதி நமது உடனையே வைத்துக் கொண்டு அதனை அடிக்கடி பார்க்கும்பொழுது, அந்த எண்ணிற்கான பாசிட்டிவ் வைப்ரேஷன் நமக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.