Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் விஜய் உடன் இணையும் இளம் இயக்குனர்! ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் விஜய் உடன் இணையும் இளம் இயக்குனர்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது நெல்சன் இயக்கம் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துக்கொன்டுள்ளார்.படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.இவருடன் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இதனையடுத்து நடிகர் விஜய் அடுத்து யாருடன் இணைந்து பணியாற்றுவார் என்று இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பரபரப்பான இந்த நேரத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனரான தேசிங்கு பெரியசாமி நடிகர் விஜயை சந்தித்து ஒரு கதையை சொல்லியுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கதைக்கு நடிகர் விஜய்யும் சரி என்று சொல்லிவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.கதை அவருக்கு பிடித்துப் போனதால் அவர் ஒத்துக்கொண்டார் எனவும் கூறுகின்றனர்.சமீப காலமாக இளம் இயக்குனர்களுடன் பணியாற்றுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் நடிகர் விஜய்.இந்நிலையில் மேலும் ஒரு இளம் இயக்குனருடன் விஜய் இணைய உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.நடிகர் விஜய் நடிக்கும் 66வது திரைப்படம் இதுவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

தேசிங்கு பெரியசாமி ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஒரு கதை சொல்லி இருக்கிறார்.ரஜினியும் அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.இதனிடையே ரஜினி நடிக்கும் படத்திற்கு பிறகு விஜயுடன் அவர் பணிபுரிவார் என்று எதிபார்க்கப்படுகிறது.இந்த திரைப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிபார்க்கப்படுகிறது.அடுத்ததடுத்து நட்சத்திர நடிகர்களின் படங்களில் பணிபுரிவது இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.இளம் இயக்குனரான இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்துள்ளார்.

Exit mobile version