இளம் கால்பந்து வீரருக்கு நேர்ந்த சோகம்! தாலிபான்கள் காரணமா?

0
235
Young football player from afghanistan died

இளம் கால்பந்து வீரருக்கு நேர்ந்த சோகம்! தாலிபான்கள் காரணமா?

ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஞாயிறன்று தாலிபான்கள் அமைப்பு கைப்பற்றியது.அந்த நாட்டை மொத்தமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது தாலிபான்கள்.ஆப்கானிஸ்தான் நாட்டில் தாங்கள் அரசை அமைக்கப் போவதாகவும் அவர்கள் கூறிவருகின்றனர்.இந்நிலையில் ஆப்கன் மக்கள் பலரும் அந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.அங்கிருந்து வெளியேறி பல நாடுகளுக்கும் அவர்கள் செல்கின்றனர்.

அவர்கள் தாலிபான்கள் மேல் கொண்ட அச்சத்தின் காரணமாக விரைந்து வெளியேறுகின்றனர்.கடந்த திங்களன்று காபூல் விமான நிலையத்தில் பல்வேறு மக்கள் நாட்டை விட்டுக் கிளம்புவதற்காக கூடியிருந்தனர்.அந்த சூழ்நிலையில் ஒரு விமானத்தில் நூற்றுக்கணக்கானோர் ஏற முயற்சித்து விமானத்தில் நெருக்கடி காரணமாக நின்றுகொண்டே பயணித்தனர்.இந்த பயணத்தின்போது இரண்டு நபர்கள் விமானத்தின் கதவருகில் பயணம் செய்ததால் சறுக்கிக் கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.இந்த சம்பவம் ஆப்கன் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் பல மக்கள் காபூல் விமான நிலையத்திலேயே நாட்டை விட்டு வெளியேறுவதற்குக் காத்துக்கொண்டுள்ளனர்.அந்த விமானத்தில் இருந்து கீழே விழுந்த அதே பயணத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 19 வயதான கால்பந்து வீரர் பயணம் செய்துள்ளார்.அவரது பெயர் சாகி அன்வாரி.அவர் ஆப்கானிஸ்தான் நாட்டிற்காக தேசிய கால்பந்து அணியில் விளையாடி வந்துள்ளார்.அவரும் அந்த விமானத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

இவர் இறந்த செய்தி ஆப்கன் மக்களுக்கும் கால்பந்து வீரர்களுக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவர் பயணம் செய்த விமானம் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இவரது இறப்புக்கு கால்பந்து வீரர்களும் பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.