Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கணவருடன் திருமண நாளை கொண்டாடிய பெண்ணுக்கு ஏற்பட்ட கதி!

கணவருடன் இணைந்து ஆசை ஆசையாக திருமண நாளை கொண்டாட முடிவு செய்த இளம்பெண்ணின் வாழ்க்கை பரிதாபமாக முடிவடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வேலூரை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேணிசைலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று பிப்ரவரி 7ஆம் தேதி திருமண நாளை கொண்டாட குடும்பத்துடன் விக்னேஷ் தனது மனைவியுடன் பாலவாக்கம் கடற்கரைக்கு வந்தார். அங்கு இரவில் அவர்கள் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடி விட்டு உறவினர்களிடம் மகிழ்ச்சியாக இருந்தனர்

இந்த நிலையில் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு விக்னேஷ் மற்றும் வேணிசைலா ஆகிய இருவரும் கடல் அலையில் நின்று மோதிரம் மாற்றிக் கொள்ள முடிவு செய்து கடற்கரையில் அருகே சென்றனர். இடுப்பளவில் தண்ணீரில் நின்று கொண்டு சரியாக 12 மணிக்கு வேணிசைலா மோதிரத்தை தனது கணவருக்கு மாற்ற முயன்ற போது திடீரென ராட்சத அலை வந்து இருவரையும் அடித்து சென்றுவிட்டது

இதைப் பார்த்த உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து அலறினார்கள். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து இருவரையும் தேடினர். ஆனால் விக்னேஷ் மட்டுமே உயிருடன் காப்பாற்றப்பட்டார். மறுநாள் அதிகாலையில் பாலவாக்கம் கடற்கரை வேணிசைலாவின் உடல் கரையொதுங்கியது. திருமண நாளை கொண்டாட கடற்கரைக்குச் சென்ற தம்பதிகளுக்கு நேர்ந்துள்ள இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version