Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆம்னி பஸ்சில் இளம் பெண்ணுடன் படுத்த வாலிபர்! இறுதியில் நடந்த சம்பவம்

ஆம்னி பஸ்சில் இளம் பெண்ணுடன் படுத்த வாலிபர்! இறுதியில் நடந்த சம்பவம்

 

பெங்களுரில் சாப்ட்வேர் என்ஜினியராக பணி புரியும் சாந்தி என்பவர் அவருடைய சொந்த ஊரான சென்னைக்கு அருகிலுள்ள கேளம்பாக்கம் வந்துள்ளார். இவருக்கு வயது 22. என்ஜினீயரான இவர் விடுமுறைக்கு அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை வந்த அவர் மீண்டும் பெங்களூருக்கு புறப்பட்டார்.

இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த சாந்தி அங்குள்ள பெங்களூருவுக்கு செல்லும் ஒரு ஆம்னி பஸ்சில் ஏறினார். 2 பேருக்கான படுத்துச்செல்லும் இருக்கையில் அவருக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.அதில் அவர் மட்டும் தனியாக பயணம் செய்தார். தன்னுடைய சீட்டுக்கு வந்த அவர் உடனே அயர்ந்து தூங்கி விட்டார்.

 

இந்நிலையில் நள்ளிரவில் சாந்தி திடீரென தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தபோது தனக்கு அருகில் உள்ள இருக்கையில் வேறு ஒரு வாலிபர் படுத்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். மேலும் தனக்கு அருகில் படுத்திருந்த அந்த வாலிபரை உடனே கீழே இறங்கும்படி கூறி அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

 

இதனால் பயந்துபோன அந்த வாலிபர், பேருந்திலிருந்து இறங்கி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே சாந்தி, இதுபற்றி அந்த ஆம்னி பஸ் டிரைவரிடம் கேட்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

இதனையடுத்து கோபமடைந்த சாந்தி இதுகுறித்து கோயம்பேடு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்துள்ளனர்.

 

அதில் அந்த இளம் பெண் என்ஜினீயர் அருகில் உள்ள இருக்கையில் படுத்திருந்தவர் கடலூரை சேர்ந்த சிலம்பரசன் (33) என்பதும், பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல அவர் அந்த ஆம்னி பஸ்சில் ஏறியதும் தெரிய வந்துள்ளது.

 

இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது, ஆம்னி பஸ் டிரைவர் தான் தன்னிடம் அந்த இளம்பெண் படுத்திருந்த அந்த இருக்கைக்கு அருகில் உள்ள மற்றொரு இருக்கை காலியாக இருப்பதாக கூறியதாகவும், அதனால் தான் அதில் ஏறி படுத்து கொண்டதாகவும் கூறினார்.

 

இதையடுத்து கோயம்பேடு போலீசார் சிலம்பரசன் மற்றும் ஆம்னி பஸ் டிரைவர் சுப்பிரமணி (48) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

சென்னையிலிருந்து பெங்களுரு சென்ற ஆம்னி பஸ்சில் நடந்த இந்த சம்பவம் கோயம்பேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version