Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே சூர்யா என்னும் 19 வயது இளைஞன் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்பவர். அதே பகுதியில் வசித்து வந்த 15 வயது பள்ளி மாணவியிடம் காதல் உணர்வு ஏற்படவே காதலை கூறியுள்ளார். முதலில் மறுப்பு தெரிவித்த அந்த பெண் இவனது ஆசை வார்த்தைகளில் ஏமாந்து சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதன் பின் அந்த பள்ளி மாணவியிடம் நெருகி பழகி பேசி வந்த சூர்யா அந்த பெண்னை திருமணம் செய்து கொள்ளவதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்னை தன் வலையில் விழவைத்து அவனது பாலியல் இச்சைக்கு இனங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அறிந்த மாணவியின் தாயார் குண்டடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சூர்யாவை பிடித்து விசாரித்ததில் அவரே அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து சூர்யாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் போலிசாரால் அடைக்கப்பட்டார்.

Exit mobile version