ஆன்லைன் கேமால் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட இளைஞர்:! கலங்க வைக்கும் காரணம்!

0
117

ஆன்லைன் கேமால் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட இளைஞர்:! கலங்க வைக்கும் காரணம்!

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் மதன்குமார் என்னும் இளைஞர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.இவர் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஊரடங்கினால் வீட்டிலேயே இருந்து வந்த மதன்குமார்,
பொழுதுபோக்கிற்காக செல்போனில் ஆன்லைன் கேம் விளையாட தொடங்கினார்.குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிய இவர்,பணம் சம்பாதிக்கும் மற்ற ஆன்லைன் கேம்களிலும் இவர் ஈடுபட்டு வந்ததுள்ளார்.

ஆரம்ப காலத்தில் நல்ல லாபம் கிடைக்கவே ஆன்லைன் கேம் மோகத்தில் இவருக்கு மேலும் ஆர்வத்தை தூண்டியது.
இதனால் மேலும் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கினார் மதன்குமார்.ஆனால் நாட்கள் போகப்போக அவர் பணத்தை இழக்கத் தொடங்கினார். இதனால் இழந்த பலத்தை மீண்டும் சம்பாதித்துவிட வேண்டும் என்று கடன் வாங்கி தொடர்ந்து ஆன்லைன் கேம்யை வெறி கொண்டு விளையாடினார். ஆனால் கடன்வாங்கி போட்ட பணத்தையும் அவர் இழந்துவிட்டார்.

இதன் காரணமாக மிகுந்த விரக்தியில் இருந்த மதன்குமார் மது பழக்கத்திற்கு தள்ளப்பட்டார்.இது மட்டுமின்றி மது அருந்தி கொண்டு மிகுந்த மன உளைச்சலில் அவர் சுற்றி வந்துள்ளார்.இந்நிலையில் கடன் கொடுத்தவர்களும் திருப்பி கேட்கவே கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சூழலும் ஏற்பட்டது.இதனால் மேலும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த மதன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைக்கண்ட மதன்குமாரின் பெற்றோர்கள் கதறி அழுதனர். பின்னர் ஆர்.எஸ் புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே தகவலின் பெயரில் வழக்கு பதிவு செய்து,காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபகாலமாக பணம் சம்பாதிக்கும் ஆன்லைன் கேமில் ஈடுபட்டு பலர் பணத்தை இழந்து இதுபோன்ற தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அரங்கேறியே இருக்கின்றது.எனவே இதுபோன்ற சூதாட்டத்தை முற்றிலுமாக அரசு ரத்து செய்யவேண்டுமென்றும், இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டின் விளம்பரங்களை டிவி ஊடகங்கள் காட்டுவதை குறைக்க வேண்டும் என்றும் மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.