Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சிக்கிய இளைஞன்!! திருட்டுக்கு உடந்தையாக இருந்த தாய் !!

கடந்த 2019 -ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி ஹைதராபாத் ரத்தகொண்டா பகுதியில் வசித்து வரும் அங்கிடி ரவிகிரண் என்பவர், தனது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் , அவர் கோவிலுக்கு செல்லும் அவசரத்தில் வீட்டை சரியாக பூட்டாமல் சென்று விட்டதாக புகாரில் கூறியுள்ளார். இதனால் கொள்ளையர்கள் எவ்வித அச்சமின்றி நகைகளை எடுத்துச் சென்றுள்ளதாகவும் காவல் நிலையத்தில் தெரிவித்தார்.மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ரவிகிரணின் பக்கத்து வீட்டு பெண் ஒருவர் , தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ஒரு போஸ்ட் செய்துள்ளார். அதில் தனது வீட்டிலிருந்து திருடுபோன நகையை அணிந்திருப்பதை கண்ட ரவிகிரண், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது , அப்பெண்ணின் மகன் பொண்ணுகோட்டு ஜிஜெந்திர் என்பவர் , நகையை திருடியது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அப்பெண்ணின் மகனிடம் விசாரித்தபோது, வீடு திறந்திருந்ததினால் நகையை திருடியதாக அப்பெண்ணின் மகன் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து அப்பெண்ணின் மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நகை திருடியதற்கு உதவிய அப்பெண்மணிக்கும் கைது நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Exit mobile version