சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்கள்! தேடும் பணி தீவிரம்!

0
189
young-people-drowned-near-salem-searching-is-intense

சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்கள்! தேடும் பணி தீவிரம்!

கடந்த சில தினங்களாகவே கனமழை முதல் மிதமான கனமழை வரை பெய்து வருகின்றது.அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றது.அதே போல் சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைப்பகுதியில் உருவாகி ஓமலூர் ,தாரமங்கலம் வழியாக எடப்பாடி பகுதியில் சரபங்கா நதி பாய்ந்து வருகின்றது.அண்மையில் பெய்த தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து எடப்பாடி பகுதியில் பாய்ந்து வரும் சரபங்கா நதிக்கரைக்கு ,தினந்தோறும் பொதுமக்கள் மீன் பிடிக்கவும் ,குளிக்கவும் ,கரை பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்ளவும் வருகின்றனர்.இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட நைனாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர்கள்  ஐயப்பன்(22),கெளதமன்(26)மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவர்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து சரபங்கா நதியில் இறங்கி குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது தண்ணீரின் வேகம் அதிகரித்தது.அப்போது ஐயப்பன் மற்றும் கெளதம் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.அவர்களை காப்பாற்ற நண்பர்கள் முயற்சி செய்தனர்.ஆனால் அவர்களால் முடியாததால் உடனடியாக எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சர்பங்கா நதிக்கரையில் முகாமிட்டு பேரிடர் மீட்பு வீரர்கள் மற்றும்  உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.