Tamil Nadu Government: தமிழ்நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும், அனைத்து விதமான சேவைகளும் வாய்ப்புகளும் கிடைக்கிறதோ, அதேபோல் தொழிற்துறையில் அனைவருக்கும் அனைத்து விதமான வாய்ப்புகளும், வசதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று “கோ வொர்கிங் ஸ்பேஸ்” சேவையை அளிக்கும் முயற்சியில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு அரசு களமிறங்கியுள்ளது.
நம் தமிழக முதல்வர் இன்று திறந்து வைக்கப்பட்ட முதல் “கோ வொர்கிங் ஸ்பேஸ்” வசதியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திறக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் இளைஞர்களின் திறமையை மேம்படுத்தி, தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பது ஆகும். இந்த மையத்தில் இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் தொழில் தொடங்குவதற்கு தேவையான நிதி உதவி மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதன் மூலம் இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி நம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சென்னையில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவை பெரிய நிறுவனங்களுக்கு அளிக்காமல் சிறிய நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கும் முக்கிய குறிக்கோள் கொண்டது என கூறப்படுகிறது.
இந்த தளத்தில் போட்டி தேர்வுகள் மேற்கொள்ள வசதியாக 2000 புத்தகம் மற்றும் கம்ப்யூட்டர் வசதிகள் உடன் 51 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு முதல்வர் படைப்பகம் என்ற பெயரின் “கோ வொர்கிங் ஸ்பேஸ்” சேவையை அளிக்கிறது. இந்த திட்டத்திற்கான முக்கிய நோக்கம் இளைஞர்களின் திறமையை மேம்படுத்தி தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பது ஆகும்.