Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நான்கே மாதத்தில் கசந்த காதல் திருமணம்.. தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்..!

sucide

sucide

திருமணமான நாளே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் , அகூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (20). இவர் செருக்கனுர் கிராமத்தை சேர்ந்த மாலினி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில், இருவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த மாலினி சம்பவதன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறபட்டுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாலினியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மாலினியின் உறவினர்கள் காவல்துறை சூப்பிரண்டை சந்தித்து மாலினியின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். திருமணமான நான்கே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன உளைச்சல் ஏற்பட்டால் மனம் விட்டு பேசுங்கள் அல்லது 104 என்ற எண்ணிற்கு அழைத்து ஆலோசனை பெறலாம்.

Exit mobile version