ரயில்முன் தள்ளிவிட்டு இளம் பெண் கொலை:! ஒருதலைக் காதலால் ஏற்பட்ட கொடூர விபரீதம்!

0
176

ரயில்முன் தள்ளிவிட்டு இளம் பெண் கொலை:! ஒருதலைக் காதலால் ஏற்பட்ட கொடூர விபரீதம்!

சென்னை பரங்கிமலையில் ரயில் முன் இளம் பெண்ணை தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞரை பிடிக்க ஏழு தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது!

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராமலட்சுமி.இவரது மகள் சத்தியபிரியா(20) என்பவர் தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பீகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

ஆதம்பாக்கம் ராஜா தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் மகன் சதீஷ் என்பவர் சத்தியபிரியாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.வழக்கம்போல் நேற்று (அக்டோபர் 13)சத்யபிரியா கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது சதீஸ் என்பவர் சத்யபிரியாவிடம் பேச முற்பட்டுள்ளார்.ஆனால் சத்திய பிரியா பேச மறுக்கவே இருவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கடும் கோபத்தில் இருந்த சதீஷ்,பரங்கிமலை ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயிலின் முன்பு சத்யபிரியாவை திடீரென தள்ளிவிட்டார்.

சத்திய பிரியா நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழ,சத்யபிரியாவின் தலையின் மீது ரயில் ஏறி இறங்கியது.இதனால் சம்பவ இடத்திலேயே சத்திய பிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.உடனடியாக சதீஷ் சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டார்.தகவல் அறிந்த ரயில்வே துறை காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சத்திய பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் ஓய்வு பெற்ற காவல் உதவியாளரின் மகனான சதீஷ்குமாரை பிடிக்க ரயில்வே காவல்துறை சார்பில் 4 தனிப்படைகளும்,
பரங்கிமலை துணை காவல் ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகள் என மொத்தம் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறையினர் சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது அவர்களின் வீட்டில் யாரும் இல்லை.இதனால் அவர்கள் வெளியூரு தப்பி செல்லாதபடி,சதீஷின் புகைப்படத்தை வைத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.