Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீர்காழி அருகே 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஒரே நாளில் நட்ட இளைஞர்கள்!

சீர்காழி அருகே உள்ள வல்லுவகுடி என்ற கிராமத்தில் இளைஞர்கள் ஒன்றுகூடி 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஒரே நாளில் நட்டு சாதனை முயற்சி செய்தனர்.

சீர்காழியை அடுத்த வல்லுவகுடி என்ற கிராமத்தில் உள்ள சாலையோர பகுதிகளில் அம்பேத்கர் நற்பணி மன்ற இளைஞர்கள் மூன்று வகை மரக்கன்றுகள் உள்ளடங்கிய 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஒரே நாளில் நட்டு சாதனை செய்தனர்.

பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்கம் போன்ற பல காரணங்களுக்காக மரங்கள் தினந்தோறும் வெட்டப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தக்கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்றுகூடி மரக்கன்றுகளை நடுவது மழை வளத்தை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்,சாலையோர பகுதிகளில் மண்ணரிப்பை தடுக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இளைஞர்கள் செய்த செயலுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version