Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் ரூபாய் நோட்டு செல்லவில்லையா? அல்லது கிழிந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்!! RBI -ன் அசத்தல் அறிவிப்பு!!

உங்கள் ரூபாய் நோட்டு
செல்லவில்லையா? அல்லது கிழிந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்!! RBI -ன் அசத்தல் அறிவிப்பு!!

அழுக்கு படிந்த பழைய நோட்டுகள்,சேதம் அடைந்த நோட்டுகள் போன்ற செல்லாத நோட்டுகளை இனி அனைத்து வங்கிகளிலும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என
ஆர்பிஐ ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

முன்பெல்லாம் செல்லாத நோட்டுகள் வங்கிகளில் மாற்றப்பட வேண்டுமென்றால் அந்த நோட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் எண்களில் எந்தவித சேதமும் அடையாமல் இருந்தால்தான் அந்த நோட்டு வங்கி தாரர்களிடமிருந்து மாற்றித் தரப்பட்டது.ஆனால் இந்த விதியை தற்போது ஆர்பியை மாற்றி அமைத்துள்ளது.

அதாவது சேதத்தின் அடிப்படையில் ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும் என்றும்,பழைய அழுக்கு படிந்த நோட்டுகள் மற்றும் ஓரளவு கிழிந்த நோட்டுகளை வங்கிகளால் மாற்றி தரப்படும் என்றும் ஆர்பிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது.மேலும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இருந்த இந்த வசதி தற்போது அனைத்து பொது மக்களுக்கும் அமலாகியுள்ளது.
ஒருவேளை ரூபாய் நோட்டின் சேதம் அதிக அளவில் இருந்தால் மாற்றி தருதல் நிராகரிக்கப்படலாம்.

Exit mobile version