Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் வீட்டு பிள்ளை நடத்திய பிரச்சாரம்! சினிமா பட பாணியிலிருந்த பிரச்சார உரை !

உங்கள் வீட்டு பிள்ளை நடத்திய பிரச்சாரம்! சினிமா பட பாணியிலிருந்த பிரச்சார உரை !

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் தேர்தலுக்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சியினர் தேர்தல் களத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அந்தவகையில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.ராயபுரம் மன்னார்சாமி கோவில் அருகே தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.அதன்பின் அவர் மாதா கோவில் தெரு,அம்மன் கோவில் தெரு,டி.வி தெரு,ஆண்டியப்பன் தெரு,வண்ணார் தெரு,குடிசை தெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

மக்கள் முன் அமைச்சர் கூறியது,ராயப்புரம் பகுதி மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துக் கொடுத்துள்ளேன்.அரசு நிவாரணம் நேரடியாக மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்துள்ளேன்.கொரோனா காலக் கட்டத்திலும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளேன்.ராயௌரம் தொகுத்து வளர்ச்சிக்காக அதிகமாக பாடுபட்டுள்ளேன் என்று கூறினார்.உங்களின் ஒருவனாகவும்,உங்கள் வீட்டு பிள்ளையாகவும் தன்னை நினைத்து ஓட்டு போடுங்கள் என சினமா துறையில் சிவகார்த்திகேயனை அழைப்பது போல அவர் தன்னை ஒப்பிட்டு கூறினார்.அதுமட்டுமின்றி அவர் பேசியது சினிமாப்பட பாணியில் இருந்ததாக அங்குள்ள மக்கள் பேசிக்கொண்டனர்.அவர் பிரச்சாரம் செய்தபோது அதிமுக நிர்வாகிகளும்,தொண்டர்களும் உடனிருந்தனர்.

 

Exit mobile version