Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்க கிட்னி பத்திரம்! கிட்னியை பாதுகாக்க நச்சுன்னு பத்து டிப்ஸ்!

உங்க கிட்னி பத்திரம்! கிட்னியை பாதுகாக்க நச்சுன்னு பத்து டிப்ஸ்!

நவீன மருத்துவ உலகில் நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று டயாலிசிஸ். பெரும்பாலும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருந்தால்தான் இந்த டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும். ஆனால் தற்போது இந்த டயாலிசிஸ் சிகிச்சை குழந்தைகளுக்கு கூட அளிக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

சிறுநீரகம் ரத்தத்தில் உள்ள யூரியா போன்ற நச்சுக்களை மற்றும் மேல் அதிக உப்பு மற்றும் நீரை வடிகட்டி சிறுநீராக வெளியேற்றுகிறது. இவை பாதிப்படையும் பொழுது தான் டயாலிசிஸ் சிகிச்சையும் தேவைப்படுகிறது. அதேபோல் சிறுநீரகங்களுக்கு இரண்டு எதிரிகள் நீரிழிவு நோய் மற்றும் ரத்த கொதிப்பு ஆகிய இரண்டும் தான். இவைகளை கட்டுக்குள் வைக்காவிட்டால் உங்கள் சிறுநீரகம் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

டயாலிசிஸ் என்பது சிறுநீரகங்களின் செயலை செய்தாலும் சிறுநீரகங்கள் போல செயல்படும் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் இதன் மூலம் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும் என்று கூறப்படுகிறது. எனவே வருமுன் காப்பதை போல சிறுநீரகத்தை காப்பதற்கான நடவடிக்கையை நாம் மேற்கொள்ள வேண்டும். சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கான வழிமுறைகளில் சில,

1. சிறுநீர், மலம் முதலியவற்றை அடக்க கூடாது.
2. தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்த வேண்டும்.
3. நாளொன்றுக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
4. புகை, மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
5. பசி எடுத்தால் மட்டுமே உணவு உண்ண வேண்டும். சாப்பாட்டை நன்கு மென்று உண்ண வேண்டும்.
6. அயோடின் உப்பை தவிர்க்க வேண்டும். கல் உப்பு ,இந்துப்பு பயன்படுத்தலாம்.
7. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் கூல்ட்ரிங்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
8. மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், பழங்களை உண்ணக்கூடாது.
9. வலி நிவாரணி மாத்திரைகளை அறவே தவிர்க்க வேண்டும்.
10. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்துகள் வாங்கி உண்ணக்கூடாது.
11. தினமும் நடைபயிற்சி என்பது அவசியமான ஒன்று. தினசரி ஏழு மணி நேரமாவது உறங்க வேண்டும்.

நமது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் நோய்களுக்கும் நாமே பொறுப்பு என்று அவசியம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

Exit mobile version