Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள்!! கண் மற்றும் கைப்பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் உள்ளதா? அபோ உங்களுக்கு கன்ஃபார்ம்!..

உங்கள்!! கண் மற்றும் கைப்பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் உள்ளதா? அபோ உங்களுக்கு கன்ஃபார்ம்!..

வயதான ரத்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் அழிக்கப்படும் போது பிலிரூபின் நிறப்பொருள் உடலில் அதிகளவு உற்பத்தி செய்கின்றது.இந்த பிலிரூபின் மலம் சிறுநீர் வழியாக மட்டும் வெளியேறுகிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலில் அப்படியே தங்கிவிடுகிறது.

இதனால்தான் உடல் முழுவதும் மஞ்சள் நிறம் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. மது அருந்துவதாலும் ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலை தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. வைரஸ் யு மற்றும் நுண் ஏற்படும் மஞ்சள் காமாலை அசுத்தமான நீரையும் ஈ மொய்த்த தின்பண்டங்களை உட்கொள்வதாலும் பரவுகிறது. சாக்கடை நீர் கலந்த குடிநீர் மற்றும் அசுத்தமான நீரை குடிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து ஏற்படும்.வைரஸ் வகை கிருமிகள் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.அதாவது பலமுறை பலருக்கு பயன்படுத்திய ஊசியை உபயோகப்படுத்தும் போது பரவுகிறது.இதனால் தான் இந்நோய் மக்களை எளிதில் தாக்குகிறது என ஆய்வில் தகவல் வெளிவந்தது.

Exit mobile version