Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல்லூரி மாணவிகள் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட டிக்-டாக் வீடியோவை வைத்து மிரட்டி வாலிபர் செய்த காரியம்

Youth-arrested-for-fake tik-tok-video-showing with college-students

Youth-arrested-for-fake tik-tok-video-showing with college-students

கல்லூரி மாணவிகள் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட டிக்-டாக் வீடியோவை வைத்து மிரட்டி வாலிபர் செய்த காரியம்

தென்காசி மாவட்டதிலுள்ள சுரண்டை அருகேயுள்ள அருணாசலபுரத்தை சேர்ந்தவர் தான் செல்வராஜ். இவரது 19 வயதுடைய மகன் கண்ணன் என்பவர் 9 ஆம் வகுப்பு வரை தான் படித்துள்ளார். இவர் காதல் மன்னன் என்ற பெயரில் டிக்-டாக்கில் பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இதுவரை சுமார் ஏறக்குறைய 1,000 வீடியோக்களுக்கு மேல் டிக் டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் இவரை டிக் டாக்கில் ஏறக்குறைய 4.18 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

இதனால் இவர் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு வீடியோக்களுக்கும் அதிக எண்ணிக்கையிலான லைக்குகள் மற்றும் பார்வையாளர்கள் கிடைத்து வந்தது. இந்நிலையில் இவ்வளவு வரவேற்பை பார்த்து உற்சாகம் அடைந்த கண்ணன் இதனையடுத்து ஏராளமான வீடியோக்களை டிக் டாக்கில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில்இவர் தன்னை கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் என்றும், வசதியான வீட்டுப்பையன் என்றும் டிப்-டாப் உடையணிந்து பல மாணவிகளிடம் கூறி பழகி வந்துள்ளார்.

இதை பயன்படுத்தி கொண்டு தன்னிடம் பழகி வரும் அந்த கல்லூரி மாணவிகளிடம் செல்பி போட்டோ மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை எடுத்துள்ளார். மேலும் இவர்கள் மட்டுமில்லாமல் சில திருமணமான பெண்களின் போட்டோக்களை மார்பிங் செய்தும் அவர் வைத்துள்ள டிக்-டாக்கில் வெளியிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இவர் வெளியிட்டுள்ள இந்த மார்பிங் போட்டோக்களை வைத்து கொண்டும் சில பெண்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இந்த மிரட்டல்களுக்கு பயந்த சில பெண்கள் தான் அணிந்திருந்த மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகளை அவரிடம் கொடுத்துள்ளனர். எனினும் தொடர்ந்து சில பெண்களிடம் இவ்வாறு அவர் மிரட்டி வந்ததால் இது குறித்துஅந்த பெண்கள் தென்காசி மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி.உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட காவல் துறையினர் முறையான விசாரணை நடத்தி குற்றவாளியான கண்ணனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ஸ்மார்ட் போன்கள், மெமரி கார்ட், பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட கண்ணன் மீது மிரட்டி பணம் பறித்தல், மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் சிலரையும்காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version