Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வழிகாட்டி பலகை விழுந்த விபத்தில் கோமா நிலையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு 

வழிகாட்டி பலகை விழுந்த விபத்தில் கோமா நிலையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு

வழிகாட்டி பலகை பெயர்ந்து விழுந்து கோமா நிலையில் இருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலை வழிகாட்டி பலகை பெயர்ந்து மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஆட்டோ, பைக் மீது விழுந்தது. இந்த சம்பவத்தின் போது புதுகோட்டையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (30) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

alalndhur1

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு மேல் சண்முக சுந்தரம் உயிழந்தார். இவரது உடல்சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐஸ் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றி வந்த சண்முக சுந்தரத்திற்கு மனைவி, 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரிரு மாதங்களுக்கு முன்பு பிறந்த ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version