Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இளைஞர்களே ரெடியா 1000 திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்!! மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

Youth ready more than 1000 vacancies!! Great Employment Camp!!

Youth ready more than 1000 vacancies!! Great Employment Camp!!

இளைஞர்களே ரெடியா 1000 திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்!! மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. மேலும் படித்து முடித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை பெற்று தரும் நோக்கத்தில் அடிக்கடி வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயம் வருகிறார்கள்.

மேலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம்  கடந்த ஓராண்டாக அனைத்து மாவட்டங்களில் நடந்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கருணாநிதி நூற்றாண்டு விழா இந்த ஆண்டுமுழுவதும் கொண்டாப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள மேரி மாதா மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் முகாம் நடைபெற உள்ளது.மேலும் சிறப்பு முகாம் மதுரை, தேனி, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது.    கோவில்பட்டியில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த முகாமில் 1000 திற்கும் மேற்பட்ட் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இந்த அரிய வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு உள்ளது. இந்த முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த முகாவில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கல்வி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை கட்டயாம் எடுத்து வர வேண்டும் என்று அறிவித்துள்ளது.

Exit mobile version