Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாற்றுத்திறனாளி என கூட பாராமல் அடித்த இளைஞர்கள்! சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் A.V.R ரவுண்டானா என்ற பகுதியில் குடிபோதையில் இரண்டு வாலிபர்கள் மாற்றுத்திறனாளி ஒருவரை அடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் உள்ள a.v.r ரவுண்டானா என்ற பகுதியில் மாற்றுத்திறனாளி தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் உணவுக்கு சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் உணவை உண்டு வசித்து வந்துள்ளனர்.

 

இந்நிலையில் மேம்பாலத்தின் அடியில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அவ்வபோது அந்த மாற்றுத்திறனாளி உடன் வம்பிலுத்து வந்துள்ளனர்.

கொரோண அதிகமாக பரவி வருகிறது. அதனால் முககவசம் அணிந்து பேசுமாறு அந்த இளைஞர்களிடம் கூறியுள்ளார்.

 

எங்களுக்கு புத்தி சொல்கிறாயா என மாற்றுத்திறனாளிக்கு பலத்த அடி உதை கொடுத்து உள்ளனர். இதனால் கதறி துடித்து உள்ளார் அந்த மாற்று திறனாளி.

 

அந்த சமயத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அதை பார்த்து விசாரிக்கவே குடிபோதையில் மாற்றுத்திறனாளிக்கு பாதகம் ஏற்படுத்தியது தெரிந்தது.

 

அதனால் போலீசார் அந்த இரண்டு இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர்.

 

இளைஞர்களின் மனித நேயமற்ற இந்த செயல் மிகவும் கண்டனத்துக்கு உரியது என சமூக ஆர்வலர்கள் திட்டி வருகின்றனர்.

 

Exit mobile version