Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடுத்தர மக்களும் கோடீஸ்வரராக மாறலாம்! 15 ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத வருமானம்!

இன்று இருக்கின்ற பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு ஏதாவது ஒன்றில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பொது மக்களிடையே அதிகளவில் இருந்துள்ளது. அதிலும் ஒவ்வொரு முதலீட்டாளர்களும் ஆபத்து இல்லாத முதலீடு மற்றும் குறைந்த முதலீட்டு திட்டங்களில் தற்போது பணத்தை சேமிக்க விரும்புவார்கள்.

அவற்றில் பெரும்பாலானோர் தற்போது தேர்வு செய்வது மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு திட்டம் தங்களிடம் இருக்கின்ற சிறிய தொகையை கூட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து லாபங்களை பெற முடியும். ஆகவே தான் மக்களும் ஆர்வத்துடன் இதில் முதலீடு செய்கிறார்கள்.

தற்போது நடுத்தர மக்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்பதற்கு ஏற்றவாறு 15* 15* 15* என்ற விதி மியூச்சுவல் ஃபண்ட் பின்பற்றுகிறது எப்படி குறைந்த முதலீட்டில் இந்த புதிய முதலீட்டு திட்டம் கோடீஸ்வரராக மாற்றுவதற்கு உதவுகிறது என்பது தொடர்பாக இங்கே நாம் அறிந்து கொள்ளலாம்.

தன்னிடம் இருக்கின்ற குறைந்த அளவிலான பணத்தை முதலீடு செய்ய விரும்புவதற்கான திட்டம் தான் 15* 15* 15* என்ற மியூச்சுவல் ஃபண்ட் இன் புதிய விதியில் ஒவ்வொரு வருடமும் 15 சதவீத பாட்டி வழங்கும் திறன் இதில் இருக்கிறது. ஆகவே மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து 15 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் வரையில் வருமானம் பெற முடியும்.

இருந்தாலும் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் வருடம் தோறும் 15% வருமானத்தை உருவாக்குவது சாத்தியமில்லை. ஆனால் பதினைந்து சதவீத வருடாந்திர வருமானம் நிச்சயமாக நீண்ட காலத்திற்கு சாத்தியமாக அமையும்.

இத்துடன் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் செலுத்தும் பணத்திற்கு வட்டியை பெறும் போது உங்களுடைய அசல் தொகையையும் சேர்த்து அதிகரிக்கும் திறன் இதில் இருக்கிறது ஆகவே அடுத்த மாதம் தங்களிடம் இருக்கும் அசல் தொகை மற்றும் முதலீட்டு செய்யும் பணத்திற்கு வட்டியை பெற முடியும்.

இப்படி ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலில் செய்யும் பழத்திற்கு வட்டியும் கணிசமாக அதிகரிக்கிறது. புதிய விதியின் படி 15 சதவீத வட்டி விகிதத்தின் அடிப்படையில் மாதந்தோறும் 15,000 என்று 15 ஆண்டுகள் முதலீடு செய்யும் போது ஒரு கோடி ரூபாய் வரையில் நீங்கள் லாபம் பெறலாம். ஆகவே குறைந்த முதலீட்டில் அதிக லாபம் மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் இந்த திட்டத்தை ஒவ்வொரு முதலீட்டாளர்களும் தேர்வு செய்ய வேண்டும்.

அதேநேரம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் என்று வரும்போது நீங்கள் பணத்தை மட்டும் அல்ல உங்களுடைய நேரத்தையும் முதலீடு செய்ய வேண்டும் சரியான சமயத்தில் நீங்கள் முதலீடு செய்தால் நிச்சயமாக நடுத்தர வர்க்கத்திலிருந்து கோடீஸ்வரராக சுலபமாக மாறலாம் என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

Exit mobile version