யுட்யூபில் பிரபல food vlogger ஆக இருப்பவர் இர்ஃபான். இவருக்கு youtube தளத்தில் 4.57 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ளார். இவர் பெரிய பெரிய ஓட்டல்களில் சென்று உணவுகளை சாப்பிட்டு அந்த உணவை பற்றி விமர்சனம் செய்து youtube ல் பதிவிடுவார். தற்போது அவர் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்களை அழைத்து விடியோ எடுத்து ஊடகங்களில் பதிவிட்டு மேலும் பிரபலமானார்.
ஆனால் புகழ்பெற்ற அளவிற்கு சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார். இதற்கு முன்னதாக கார் விபத்தில் சிக்கினார் அதனை தொடர்ந்து சட்டப்படி கருவில் உள்ள குழந்தை பிறக்கும் முன் பாலினத்தை அறிந்து கொள்வது இந்திய சட்டப்படி குற்றமாகும், ஆனால் இர்பான் தனது மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். பிறகு மன்னிப்பு கேட்டு அந்த விடியோ பதிவை நீக்கினார்.
இந்நிலையில் தற்போது தனது மனைவியின் பிரசவத்தை வீடியோ எடுத்து அதை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேலும் குழந்தை பிறக்கும் போது தொப்புள் கோடியை வெட்டும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். ஆனால் இவ்வாறு இர்பான் தொப்புள் கோடியை தவறு அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவர்களும், ஊடகங்களில் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.