Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் டிவிக்கு டப் கொடுக்கும் ஜீ தமிழ்! பதற்றத்தில் விஜய் டிவி! 

Zee Tamil dubs for Vijay TV! Vijay TV in tension!

Zee Tamil dubs for Vijay TV! Vijay TV in tension!

விஜய் டிவிக்கு டப் கொடுக்கும் ஜீ தமிழ்! பதற்றத்தில் விஜய் டிவி!

ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.அந்த தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.அதில் பாக்கியலட்சுமி என்னும் சீரியலும் ஒன்று.இந்த சீரியலில் அன்றாடம் ஓர் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை கதையாக்கி சீரியலாக எடுத்துள்ளனர்.அதில் பெண்கள்,குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என தத்துருவமாக படமாக்கப்பட்டு காட்டியுள்ளனர்.

இந்த சீரியலில் நடப்பதைப்போல தின வாழ்க்கையில் அனைத்து குடும்பங்களில் நடப்பதால் இந்த சீரியலை மட்டும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி பார்த்து வருகின்றனர்.இந்த சீரியல் தான் விஜய் டிவிக்கு அதிக அளவு டிஆர்பி-யை ஏற்றித் தருகிறது.

இந்நிலையில் ஜீ தமிழ் சமீபகாலமாக ஸ்டார் விஜயில் எடுக்கப்படும் சீரியல்களை ஈ அடுச்சான் காபியை போல் ஜீ தமிழ் எடுத்து வருகிறது.நாடகம் மட்டுமல்லாமல் ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ-வையும் காப்பி அடித்து வருகிறது.தற்போது பாக்கியலட்சுமி சீரியலை பார்த்து அதே கதையை மையமாக்கி ஜீ தமிழ் புதுபுது அர்த்தங்கள் என்னும் சீரியலை வெளியிட்டுள்ளது.

இதில் தேவயானி குடும்ப பெண்மணியாக நடித்துள்ளார்.பல வருடங்கள் கழித்து நடிக்கும் தேவயானிக்கு இதுவே முதல் சீரியலாகும்.அதுமட்டுமின்றி பாக்கியலட்சுமி சீரியலைப் போலவே ஓர் குடும்ப பெண்மணியின் இன்னல்களைக் கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது.தேவயானி நடிப்பிர்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.இதனால் விஜய் டிவியின் டிஆர்பி சற்று குறைய வாய்புகள் உள்ளது என சின்னத்திரையுலகினர் கூறி வருகின்றனர்.

Exit mobile version