ஜீரோ பட்ஜெட் இயற்கை பூச்சி விரட்டி!! இதை எப்படி தயாரித்து பயன்படுத்துவது?
உங்கள் தோட்டத்து செடிகளில் உள்ள புழு,பூச்சிகளை விரட்ட செலவில்லாத ஆர்கானிக் பூச்சி விரட்டி தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
பூச்சி விரட்டி தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:-
1)அரளி இலை
2)சப்பாத்திக்கள்ளி
3)வேம்பு
4)மாட்டு சாணம்
5)மாட்டு கோமியம்
6)மஞ்சள் தூள்
7)எருக்க இலை
செய்முறை:-
ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் ஒரு கிலோ நாட்டு மாட்டு சாணம்,ஒரு லிட்டர் மாட்டு கோமியம் சேர்க்கவும்.
அதன் பிறகு ஒரு பாக்கெட் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கம்பு கொண்டு கலக்கி விடவும்.பிறகு ஒரு கைப்பிடி அளவு எருக்க இலை,அரளி இலை,வேம்பு மற்றும் 5 சப்பாத்திக்கள்ளி அரைத்து விழுதாக்கி ட்ரம்மில் போட்டு கலந்து விடவும்.
பின்னர் ஒரு காட்டன் துணி அல்லது கோணி சாக்கை வைத்து ட்ரம்மை மூடவும்.இதை ஒரு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கம்பு கொண்டு கலக்கி விடவும்.
15 நாட்கள் கழித்து செடிகளுக்கு பயன்படுத்தலாம்.10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி அளவு தயாரித்த இயற்கை பூச்சி விரட்டியை ஊற்றி செடிகளின் இலைகளில் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு வாரம் இருமுறை தெளித்து வந்தால் செடி,கொடி இலைகளில் உள்ள புழு,பூச்சி நீங்கி செடி ஆரோக்கியமாக வளரும்.