தற்போது உள்ள காலகட்டத்தில் பலர் சொந்தமாக தொழில் ஆரம்பிக்க எண்ணுகிறார்கள். ஆனாலும் பலர் முதலீடு செய்ய இயலாமல் பின்வாங்கி விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு முதலீடு இல்லாமல் தொழில் தொடங்குவதற்கான தொழில் யோசனைகள் சிலவற்றை இப்போது நாம் பார்க்கலாம்.
தற்கால இளைஞர்கள் இளைஞர்கள் அடுத்தவர்களுக்கு வேலை செய்வதை விடவும் சுய தொழில் செய்து அதில் வெற்றி பெற விரும்புகிறார்கள் ஆனாலும் பலர் தங்களுடைய திறமையை பயன்படுத்தி சாதனை படைக்க இயலாமலும் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகிறார்கள். அது போன்றவர்கள் இந்த சிறந்த வணிக யோசனைகளை பெற்று பயன் பெறலாம்.
சிறிய அளவிலான தொழிலாக இருந்தாலும் குறைந்தபட்ச முதலீடு என்பது எல்லோருக்கும் தேவைப்படும் ஆனால் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்யாமல் லட்சக்கணக்கில் சம்பாதிப்பது என்பது சாத்தியமான ஒன்றா? என உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம்.
இதற்கு முதலீடு என்பது தேவையே இல்லை ஆனாலும் திறமையும் தனிப்பட்ட சிந்தனையும் இருந்தால் நிச்சயமாக இந்த தொழிலின் மூலமாக நீங்கள் லட்சங்களை எண்ணிப் பார்க்கலாம் அதில் ஒன்றுதான் சமூக வலைத்தளங்கள்.
இப்போதுள்ள காலகட்டத்தில் இளைஞர்களிடையே சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் தொடர்பாக தெரியாதவர்கள் யாருமே இருப்பதற்கான வாய்ப்பில்லை. இதையே ஒரு மூலதனமாக மாற்றி அதில் உங்களுடைய உழைப்பையும், திறமையையும், மூலதனம் செய்யலாம். அதோடு குறைந்தது 10 நபர்களுக்கு வேலை வழங்கக்கூடிய நிலையையும் நீங்கள் அடையலாம்.
அதாவது இப்போதெல்லாம் பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கணக்குகளை தெரிந்து வைத்துக் கொண்டு தங்களை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதற்காக அவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்வதாகவும், சொல்லப்படுகிறது. ஆனால் அனைத்து விதமான கணக்குகளையும், அவர்களுடைய பெயரில் தோற்றுவித்தாலும் அவை வேறொருவரால் நிர்வகிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சென்னை அணிக்காக விளையாடும் போது அவர் தமிழில் சமூக வலைதளத்தில் பதிவு செய்கிறார் இதனை அவரை தமிழ் தெரிந்து பதிவு செய்வதில்லை தமிழ் நன்றாக தெரிந்த அதே சமயத்தில் சமூக வலைதளத்தில் ஆர்வமாகவும் ரசிகர்களை ஈர்க்கும்படியும் கவர்ச்சியாக பதிவிடும் ஒருவரை அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்திற்காக பயன்படுத்துகிறார்.
இதைப் போன்று தான் பலர் தங்களுடைய ஊடக கணக்குகளை நிர்வாகம் செய்ய குறிப்பாக நிபுணர்களை நியமனம் செய்கிறார்கள். தனிப்பட்ட கணக்குகள் மட்டும் அல்லாமல் வெவ்வேறு பெயர்களில் இருக்கும் கணக்குகளும் அவர்கள் சார்ந்த வல்லுனர்களால் திறக்கப்படுவதால் அவர்களுக்கு போதிய விளம்பரம் கிடைத்து விடுகிறது. அவர்களின் பணி பொதுமக்களிடம் செல்கிறது.
தங்களுக்கு சமூக ஊடகங்கள் தொடர்பாக அறியவும் கணக்குகளை நிர்வாகிப்பதில் ஆர்வமும் இருந்தால் பிரபலங்களின் சமூக ஊடக கணக்குகளுக்கு நீங்கள் நிர்வாகியாக செயல்படலாம். அதற்கு அதீத முயற்சி தேவை என நினைப்பது தவறு, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வீட்டில் அமர்ந்து கொண்டு கணினி முன்பு அமர்ந்து அவர்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் மற்ற பதிவுகள் அதோடு காணொளிகளை உங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் சுவாரஸ்யமாகவும், கவர்ச்சியாகவும், பதிவேற்றம் செய்யலாம்.
அதோடு போட்டோ ஷாப் மற்றும் வீடியோ எடிட்டிங் தொடர்பான அறிவாற்றல் இருந்தால் இந்த வேலையில் சிறந்து விளங்கலாம். உங்களுடைய செயல்திறன் மற்றும் நீங்கள் பணியாற்றும் நபரின் நிலை உள்ளிட்ட அவற்றினடிப்படையில் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனாலும் முதலில் சிறிய அளவிலான நபர்களுக்கு சமூக ஊடக நிர்வாகியாக பணிபுரிந்தால் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
இதில் பிரபலமானால் ஒரே சமயத்தில் பல சமூக ஊடக கணக்குகளை பராமரிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது உங்களுக்கு கீழ் சிலரை வேலைக்கு அமர்த்தி உங்களுடைய தொழிலை விரிவு செய்யலாம். ஆகவே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் ஆனாலும் கூட, முதல் வாய்ப்பு கிடைத்து பணிகளை செய்து வருபவர்களை சந்தித்து பிரபலங்களை அணுகி வாய்ப்புக்கூற வேண்டும். வாய்ப்பு கிடைத்துவிட்டால் சில நாட்கள் இலவசமாக வேலை செய்ய எந்த விதமான தயக்கத்தையும் காட்டாதீர்கள்.
தற்சமயம் 80 சதவீத அரசியல் கட்சித் தலைவர்கள் கூட அந்தத் துறையில் ஆய்வாளர்கள் மற்றும் கணக்கெடுப்பு குழுக்களை பணியாற்றுகிறார்கள். இதன் காரணமாக, இந்த துறையில் பெரும் வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது. உங்களுக்கு அரசியல் ஆரம்பமும், சமூக வலைதளத்தை நன்றாக பயன்படுத்த தெரிந்திருந்தால் இந்தத் துறையில் நீங்கள் அதீத லாபத்தை ஈட்ட முடியும்.
உங்களுடைய யுக்திகள் அவர்களுக்கு பயனளிக்கும் விதமாக இருந்தால் அவர்கள் நிச்சயமாக உங்களை அவர்களுடைய அரசியல் வியூகவாதியாக அமர்த்துவார்கள்.
உங்களுடைய வெற்றி சதவீதத்தினடிப்படையில் தங்களுக்கு வெகுமதி கொடுக்கப்படும். இந்தத் துறையில் நல்ல பெயர் எடுத்து விட்டால் சில இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி அதன் மூலமாக சர்வேயும் நடத்தலாம்.