Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புதன் பகவான் சிம்ம உதயமாவதால் பேரதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்..!

#image_title

புதன் பகவான் சிம்ம உதயமாவதால் பேரதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்..!

புதன் பகவான் வரும் செப்டம்பர் 15ம் தேதி அதிகாலை 4.28 மணிக்கு சிம்ம ராசியில் உதயமாக உள்ளார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பும், நன்மையும் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –

மேஷம்:

புதன் பகவான் வரும் செப்டம்பர் 15ம் தேதி சிம்ம ராசியில் உதயமாவதால், மேஷராசிக்காரர்களே உங்களுக்கு பல வெற்றிகள் தேடி வரப்போகிறது. மேலும், எதிர்பாராத பண வரவுகள் வரும். உங்களுடைய தொழில் மேன்மேலும் சிறக்க உள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள். நிதிநிலை சீராகும். நல்ல செய்திகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெறும். பல ஆண்டுகள் இருந்து வந்த பணப்பிரச்சினை சரியாகும்.

மிதுனம்:

புதன் பகவான் வரும் செப்டம்பர் 15ம் தேதி சிம்ம ராசியில் உதயமாவதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு தைரியமும், பலமும் பெருகும். பணி செய்யும் இடத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பெரியோர்களால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மனைவியுடன் இணைக்கமாக இருப்பீர்கள்.

சிம்மம்:

புதன் பகவான் வரும் செப்டம்பர் 15ம் தேதி சிம்ம ராசியில் உதயமாவதால், சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரும். உங்களுடைய ஆளுமை மேம்படும். பொருளாதார ரீதியில் உங்களுக்கு நல்ல அனுகூலங்கள் கிடைக்கும். நம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். நிதிநிலைமை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வாழ்வில் இனிமை நிலைக்கும்.

Exit mobile version