“Zomato” “Swiggy” உணவு விநியோக சேவை நிறுத்தம்!! திண்டாடும் மக்கள்!!

0
193

தங்கள் ஊழியர்களிடம் போலீசார் மிகக் கடுமையாக நடந்து கொண்டதால் Zomato, swiggy நிறுவனம் தங்களது உணவு விநியோகிக்கும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ள சம்பவம் ஹைதராபாத்தில் மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம் அரங்கேறி வரும் நிலையில் அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றவாறு ஊரடங்கு களை கடுமையாகி வருகிறது. ஊரடங்கும் மீறுவோருக்கு தண்டனை வழங்குதல் அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

 

அதேவேளையில், மருத்துவ பணியாளர்கள், பத்திரிகையாளர், சுகாதார பணியாளர்கள், உணவு விநியோகம் செய்பவர்கள் ஆகியோர் தங்களின் பணியை எவ்வித தடையும் இன்றி செய்ய மாநில அரசுகள்அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

தெலங்கானா மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளபோதிலும் zomato, swiggy ஆகிய நிறுவனத்தின் ஊழியர்கள் உணவு விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் வினியோகம் செய்ய சென்ற zomato, swiggy ஊழியர்களை போலீசார் வழிமறித்து அபராதம் கட்டச் சொல்லி இருக்கின்றனர். மேலும் அவர்களிடம் மிக கடுமையாக நடந்து கொண்டுள்ளனர். மேலும் ஊழியர் ஒருவரை போலீசார் தாக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் ஒரு சில இடங்களில் மக்களின் தேவைக்காக உணவு விநியோகத்திற்கு சென்ற ஊழியர்களிடம் போலீசார் வழிமறித்து வாகனங்களை பறிமுதல் செய்து 1000 ரூபாய் அபராதம் கட்ட சொல்லி இருக்கின்றனர். போலீசாரின் இந்த செயல் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.ஹைதராபாத் எம்.பி.யும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவருமான ஓவைசி, போலீசாரின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

மக்களின் தேவைக்காக உணவு வினியோகம் செய்ய சென்ற ஊழியர்களிடம் போலீசார் நடந்து கொண்டது மிகவும் கண்டனத்துக்குரியது. மேலும் தங்கள் ஊழியர்களை தாக்கியதற்காக தகுந்த விளக்கம் அளிக்காத வரை swiggy மற்றும் Zomato நிறுவனம் உணவு விநியோகம் செய்யும் சேவையை நிறுத்தி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.