Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா! அடுத்த மருந்துக்கு அனுமதி கொடுத்த மத்திய அரசு!

நாட்டில் கொரோனா நாட்கள் செல்ல செல்ல அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் மிக தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த நோய்த்தொற்று கட்டுப்படாமல் அதிகரித்து வருகிறது.அதோடு மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஆக்சிசன் உள்ளிட்டவை மற்றும் தடுப்பூசி போன்றவை போதுமான அளவில் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

இதனை சரிசெய்வதற்கு மத்திய அரசு முழுமூச்சாக செயல்பட்டு வருகிறது என்றும், இந்த தட்டுப்பாடு உடனடியாக நீக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்திருக்கிறார்.இந்த சூழ்நிலையில், இந்தத்தொற்றிற்கு ஜைடஸ் நிறுவனத்தின் விராபின் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மூன்று லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதியாகியிருக்கிறது. அதேபோல இந்த நோய்க்கு பலியாகி எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே வழி தடுப்பூசி மட்டும் தான்.

அதன் காரணமாகவே, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நம்முடைய நாட்டில் தொடக்கத்தில் கோவாக்சின், கோவிஷீல்ட் என்ற இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்பொழுது அவசரகால பயன்பாட்டில் இருந்த ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

அத்துடன் தற்போது நான்காவதாக இந்த சிகிச்சைக்கு விராஃபின் என்ற மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த மருந்தை ஜைடஸ் காடிலா என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.லேசான அறிகுறியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுப்பதில் இந்த மருந்து வெற்றிகரமாக செயல்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த மருந்து மூலமாக சிகிச்சை கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு 91.15% பேருக்கு 7 தினங்களுக்கு பின்னர் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று தெரியவந்திருக்கிறது.

நாடு முழுவதும் இருபது முதல் 25 மையங்களில் சோதனை செய்யப்பட்டது.அதில் இந்த மருந்தை எடுத்துக் கொண்ட நோயாளிகளுக்கு குறைந்த ஆக்சிசனே தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version