Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடரை வெல்ல போவது யார்?

டி20 தொடரை வெல்ல இந்தியா இங்கிலாந்து அணிகள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக நடந்த 4 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றியைப் பெற்று சம பலத்துடன் மோதுவதால் இந்த டி20 போட்டிக்கு பரபரப்பு இருக்காது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட்,5டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 3க்கு 1 என்ற கணக்கில் வென்றிருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்றுவரும் டி20 தொடரில் முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் , இரண்டாவது மற்றும் நாங்காவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. ( டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் இதே மைதானத்தில் தான் நடைபெற்றது ). மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் , ஸ்டோக்ஸ், மலன், பேர்ஸ்டோ ஆகியோர் பேட்டிங்கிலும், ஆர்ச்சர், அடில் ரஷிட் ஆகியோர் பந்துவீச்சிலும் அசத்திவருகின்றனர். அதேபோல் இந்திய அணியில் புதுமுக வீரராக களமிறக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், கேப்டன் கோலி , பண்ட் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

டி20 தொடரில் சாதனை:

2018 ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி ஒருமுறை மட்டுமே டி20 தொடை இழந்துள்ளது. ( இந்திய அணியிடம் ). அதே போல் 2017 ஆண்டிற்கு பிறகு இந்தியா பங்கேற்றுள்ள 19 டி20 தொடர்களில் இரண்டில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது.

இடம் : நரேந்திரமோடி மைதனாம் குஜராத் ( ரசிகர்க்ளுக்கு அனுமதி இல்லை)
நேரம் : மாலை 7 மணி
நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

Exit mobile version