Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் 4.3 கோடி ரூபாய் மோசடி செய்த சகோதரர்..!!

Cricketer Hardik Pandya's brother defrauded him of Rs 4.3 crore..!!

Cricketer Hardik Pandya's brother defrauded him of Rs 4.3 crore..!!

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் 4.3 கோடி ரூபாய் மோசடி செய்த சகோதரர்..!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் அவரின் ஒன்று விட்ட சகோதரர் வைபவ் பாண்டியா பண மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா,குர்ணால் பாண்டியா மற்றும் இவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா ஆகிய மூவரும் இணைந்து கடந்த 2021ஆம் ஆண்டு பிஸ்னஸ் ஒன்றை தொடங்கியுள்ளனர்.இதில் ஹர்திக் மற்றும் குர்ணால் ஆகிய இருவரும் தலா 40% முதலீடும்,வைபவ் 20% முதலீடும் செய்துள்ளனர். 

இந்த தொழிலை ஹர்திக் பாண்டியாவின் ஒன்றுவிட்ட சகோதரரான வைபவ் பாண்டியா தான் முழுவதுமாக கவனித்து வந்துள்ளார்.கிடைத்த லாபத்தை மூவரும் முதலீடு செய்ததன் அடிப்படையில் பிரித்து வந்துள்ளனர்.இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் லாபம் குறைய தொடங்கியுள்ளது.மேலும் 3 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

என்னவென்று பார்த்தபோதுதான் வைபவ் பாண்டியா மற்ற இருவருக்கும் தெரியாமல் புதிதாக ஒரு தொழிலை தொடங்கி இதில் வந்த லாபத்தை அதில் முதலீடு செய்து வந்துள்ளார்.அதேபோல அவரின் 20% முதலீட்டையும் 33.3% அதிகரித்துள்ளார். இதுகுறித்து தெரிந்ததும் வைபவ் பாண்டியாவிடம் சென்று ஹர்திக் பாண்டியா கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஹர்திக் பாண்டியா மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அவர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வைபவ் பாண்டியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கிட்டத்தட்ட 4.3 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version