சாரா அலிகான அனன்யா பாண்டே ஹாட் வீடியோக்களை தேடிய ராஜஸ்தான் அணி வீரர்! தானாக வந்து மாட்டிய கிரிக்கெட்டர்! 

0
155
Sarah Aligana Ananya Pandey Rajasthan team player who searched for hot videos! The cricketer who came automatically!
சாரா அலிகான அனன்யா பாண்டே ஹாட் வீடியோக்களை தேடிய ராஜஸ்தான் அணி வீரர்! தானாக வந்து மாட்டிய கிரிக்கெட்டர்!
நேற்று(மே27) யூடியூபில் லைவ் வீடியோ பகிர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட்டர் ரியான் பராக் அவர்கள் சாரா அலிகான், அனன்யா பாண்டே ஆகியோர்களின் ஹாட் வீடியோக்களை தேடி பார்த்ததற்கான ஆதாரம் வெளியானதால் பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார்.
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அதிமுறை கோப்பயை வென்ற அணிகளின் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர் முழுவதும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் சிறப்பாக விளையாடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி குவாலிபையர் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது. இருப்பினும் குவாலிபையர் 2 சுற்றில் சிறப்பாக விளையாட தவறிய ராஜஸ்தான் அணி குவாலிபையர் 2 சுற்றில் 36 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் முடிவுக்கு வந்தது.
இந்த ஐபிஎல் சீசன் எப்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பான சீசனாக அமைந்ததோ அதே போல ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் அவர்களுக்கும் சிறப்பான சீசனாக அமைந்தது. இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 573 ரன்கள் எடுத்து இந்த சீசனில் அதிக ரன்கள் விளாசியவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த சிறப்பான ஆட்டத்தை அடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் ரியான் பராக் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. இந்த பொன்னான வாய்ப்பு வரும் பொழுது ரியான் பராக் அவர்கள் தானாக முன்வந்து பிரச்சனை ஒன்றில் சிக்கியுள்ளார். அதாவது அவர் பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகைகள் சாரா அலிகான், அனன்யா பாண்டே ஆகியோர்களின் ஹாட் வீடியோக்களை தேடி பார்த்தது ரசிகர்களின் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.
அதாவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் அவர்கள் நேற்று(மே27) யூடியூப் தளத்தில் கேம் விளையாடுவதை நேரலை செய்தார். அப்பொழுது அவர் சில பாடல்களை யூடியூபில் தேடினார். அப்பொழுது ரியான் பராக் அவர்கள் அவருடைய திரையை மறைக்காமல் அந்த பாடல்களை தேடினார்.
அப்பொழுது அந்த தேடல் ஹிஸ்ட்ரியில் அனன்யா பாண்டே ஹாட் என்பது தெளிவாகவும், சாரா அலிகான் ஹாட் என்பது சற்று மறைந்தும் தெரிந்தது. இதனால் ரியான் பராக் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை தேடியது வெளிப்படையாக தெரியவந்தது. இதனால் தற்பொழுது ரியான் பராக் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தற்பொழுது ரியான் பராக் அவர்களின் தேடல் தெடர்பான ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது. இவருடைய இந்த செயலால் ரியான் பராக் மீது இணையத்தில் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றது.
கிரிக்கெட் வீரர்களுக்கு சுய ஒழுக்கம் என்பது கட்டாயம் தேவை என்று பேசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் அவர்கள் பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை பார்த்துள்ளார். இது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகி இருக்கின்றது.