தென் ஆப்பிரிக்காவில் புதிய லீக் போட்டிகள்…. அணிகளை வாங்கும் நம்ம ஐபிஎல் டீம் உரிமையாளர்கள்
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் புதிதாக டி 20 தொடரை தொடங்க உள்ளது.
இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். இப்போது பிசிசிஐ கட்டுப்பாட்டில் ஏகபோக லாபத்துடன் ஆண்டாண்டு நடந்து வருகிறது ஐபிஎல் தொடர்.
இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பது போல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் தங்களுக்கான தொடர்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அவை ஐபிஎல் போல பிரபலமாகவோ அல்லது பணமழை கொட்டும் தொடர்களாகவோ இல்லை.
இந்நிலையில் இப்போது தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியமும் இதுபோல ஒரு புதிய டி 20 தொடரை தொடங்க உள்ளது. இதை பிரபலமாக்கும் விதமாக இந்த தொடரில் இடம்பெறும் அணிகள் அனைத்தையும் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கும் உரிமையாளர்களே வாங்க உள்ளார்களாம். இதன் மூலம் இந்திய ரசிகர்களையும் கவரமுடியும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.