நாக்பூர் டெஸ்ட் போட்டி! வலுவான அடித்தளம் அமைத்த இந்தியா! 

0
238
#image_title

நாக்பூர் டெஸ்ட் போட்டி! வலுவான அடித்தளம் அமைத்த இந்தியா! 

பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 400 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதில் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டி முதலில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நாக்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. அடுத்து நேற்று இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா 120 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இன்று நடைபெற்ற 3-ஆம் நாள் ஆட்டத்தில் ஜடேஜாவும் அக்சர் பட்டேலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜடேஜா 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில் அக்சர்பட்டேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து அவர் 84 ரன்களில் அவுட் ஆனார்.

இதன்மூலம் இந்திய அணி 400 ரன்கள் எடுத்த நிலையில்  அனைத்து விக்கெட்களையும் இழந்து அவுட் ஆனது.  இதன்படி முதல் இன்னிங்சில் இந்தியா ஆஸ்திரேலியா விட 223 ரன்கள் முன்னிலை பெற்று  வலுவான அடித்தளம் அமைத்து உள்ளது. உணவு இடைவேளைக்குப் பின் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க இருக்கிறது.