நாமும் காலை பிடித்துவிடலாமா.. வாய்ப்பு கிடைக்குமா?? சசிகலாவை காக்க பிடிக்க ஓபிஎஸ் யின் அடுத்த மாஸ்டர் பிளான்!!
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறப் போவதில் ஓபிஎஸ் தனது ஆதிக்கத்தை காட்ட வேண்டும் என எண்ணி பல திட்டங்களை தீட்டி அது அனைத்தும் தவிடு பொடியானதை அடுத்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என ஆலோசனை செய்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க ஓபிஎஸ் அவர்கள் பின்னடைவையே சந்திக்க வேண்டி இருந்தது, மேலும் தனது ஆதரவிற்கு ஒருவர் மட்டும் குரல் கொடுத்தால் போவது மேல் இடத்திலிருந்தும் ஏதேனும் சப்போர்ட் தேவை என்ற பட்சத்தில் அங்கு பேசும் வகையில் ஒரு நபரை தேடி வருவதாகவும் கூறுகின்றனர்.
ஓபிஎஸ் அவர்களுக்கு சாதகமாக மேலிடத்தில் பேச ஒரு நபர் கிடைத்து விட்டால் அதை வைத்து கட்சியை நடத்தி விடலாம் என மனக்கணக்கு போட்டு வருவதாகவும், ஆனால் அண்ணாமலை இருக்கும் வரை அது ஈடேறாது என்பது அவருக்கே தெரியும் என்றும் கூறுகின்றனர்.
ஏனென்றால் பெரும்பாலும் அண்ணாமலை எடப்பாடி பக்கம் தான் பேசி வருவதாகவும், அவர் இருக்கும் வரை வேற யாராலும் ஓபிஎஸ்-ற்கு ஆதரவாக களத்தில் இறங்கி பேச முடியாத சூழலில் உள்ளது என கூறுகின்றனர்.அதனால் அடுத்ததாக இவருடைய மாஸ்டர் பிளான் என்னவென்றால் சசிகலாவுடன் இணைவது தான் எனக்கு கூறுகின்றனர்.
அந்த வகையில் இவரது அடுத்த டார்கெட் சசிகலா தான், தற்பொழுது இந்த தேர்தலில் பின்னடவை சந்தித்தாலும் இந்த ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுக்குப் பிறகு கட்டாயம் சசிகலாவுடன் இணைந்து கட்சிக்குள் பயணிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அப்பொழுதுதான் வரப்போகும் மக்களவைத் தேர்தலில் ஓர் இடத்தையாவது பிடிக்க முடியும் என ஓபிஎஸ் மீண்டும் தனது திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர்.
ஆனால் ஓபிஎஸ் என்னதான் திட்டம் தீட்டினாலும் பொதுக்குழு குறித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தால் மட்டுமே முழு பொறுப்பு யாருக்கு சென்றடையும் என தெரிய வரும், அப்பொழுது தான் இரட்டை இலை மற்றும் சின்னம் அனைத்தும் ஒருவருக்கு சேரும். அந்த வகையில் அதிக அளவு ஆதரவு என்று பார்த்தால் எடப்பாடி பக்கம் இருப்பதால் தற்பொழுது இவர் சற்று நெருக்கடியில் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
வேண்டுமானால் டி டிவி சசிகலா ஓபிஎஸ் அவர்கள் குக்கர் சின்னத்தில் மக்களவைத் தேர்தலில் நின்று வெற்றி பெறவில்லை என்றாலும் அதிமுகவின் ஓட்டுகளை பிரிக்க வழி வகுக்க போவதாக திட்டம் தற்பொழுது இருந்தே தீட்டுவதாகவும், அதுமட்டுமின்றி இந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் கூட தான் மற்றும் மற்றவர்களின் பலம் இல்லாமல் பின்னடைவை தான் அதிமுக சந்திக்கும் என பன்னீர்செல்வம் கூறி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.